
ஏழைகள் நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருணையுள்ள அரசு: பிரதமர்
June 05th, 09:45 am
கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தெரிவித்துள்ளார். அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏபிபி நெட்வொர்க் இந்தியா @2047 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
May 06th, 08:04 pm
இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
May 06th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 28th, 08:00 pm
டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 28th, 06:53 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.