அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
September 14th, 11:30 am
பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்,அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:00 am
இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.