ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

April 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆ ம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரை

March 18th, 01:05 pm

பிரயாக்ராஜில் நடைபெற்ற பிரம்மாண்டமான மகாகும்பமேளா குறித்த அறிக்கையை நான் இங்கு வழங்குகிறேன். இந்த மதிப்புமிக்க அவையின் வாயிலாக, மகாகும்பமேளாவை வெற்றியடையச் செய்த கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றியை உறுதி செய்வதில் பல தனிநபர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அரசுக்கும், சமுதாயத்திற்கும், அர்ப்பணிப்புள்ள அனைத்து ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும், குறிப்பாக பிரயாக்ராஜ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

March 18th, 12:10 pm

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மகாகும்பமேளாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்த நாட்டின் எண்ணற்ற மக்களுக்கு, தனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறினார். மகா கும்பமேளா நிகழ்வை வெற்றி பெறச் செய்ததில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கூட்டுப் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், அரசு மற்றும் சமூகம் இரண்டில் இருந்தும் ஈடுபட்ட அனைத்து தர்ப்பினரின் அர்ப்பணிப்புமிக்க பணிகளை அங்கீகரித்து பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள்,குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் அளித்த ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையில் பங்கேற்ற மகாத்மா காந்திக்கும் மற்ற அனைவருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார்

March 12th, 09:01 am

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயமான வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை தற்சார்பு மற்றும் சுதந்திரத்திற்கான நாடு தழுவிய இயக்கத்திற்குக் காரணமாக அமைந்தது என்று திரு மோடி கூறியுள்ளார். தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவரின் துணிச்சல், தியாகம், உண்மை, அகிம்சைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி மேலும் கூறினார்.