பாவ்னாபென் படேல் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

June 22nd, 01:10 pm

தாத்ரா, நாகர் - ஹவேலி, டாமன், டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரபுல்பாய் படேலின் மனைவி பாவ்னாபென் படேல் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

டாமனில் நமோ மருத்துவமனையைப் பிரதமர் திறந்து வைத்தார்

June 05th, 10:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் நமோ மருத்துவமனையைத் திறந்து வைத்தார். மக்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இணங்க இது அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த மருத்துவமனை நவீன வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இந்த யூனியன் பிரதேசம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாமன் நமோ விமான நிலையத்தில் நவீன முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

June 05th, 10:18 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் உள்ள நமோ விமான நிலையத்தில் ஒரு நவீன முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தின் கீழ் சூரத் நகரில், பிரதமர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்

June 05th, 10:11 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சூரத் நகரில், மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.

குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு

June 05th, 10:08 pm

குஜராத் மாநிலம் ஹஜிராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) கலந்து கொண்டார். பாதுகாப்புத் துறையில், 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற முன்முயற்சியின் கீழ், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை அவர் பார்வையிட்டார்.

Daman has become a living example of Mini India: PM Modi

June 05th, 07:20 pm

Addressing a public gathering in Daman, PM Modi lauded Daman as a living example of Mini India. Launching multiple transformative projects spanning connectivity, health, education, tourism, and urban infrastructure, he highlighted the region's prowess in solar energy and cleanliness. Listing various government initiatives that transformed the lives of the people, he assured the Union Territory of the central government's continued support.

டாமனில் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

June 05th, 07:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, 'மினி இந்தியா'வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

PM to visit Surat and Daman on 5th June

June 04th, 10:03 am

PM Modi will visit Gujarat and Daman on 5th June, 2026. He will visit Hazira in Surat district to review ongoing industrial operations and infrastructure projects. Later, he will launch projects worth around ₹18,800 crore in Surat. In Daman, he will inaugurate the New Terminal Building of NAMO Airport and NAMO Hospital and also launch projects worth around ₹2,970 crores. He will also lay the foundation stone for projects in Lakshadweep worth around ₹885 crore.

சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 07th, 03:00 pm

நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

March 07th, 02:45 pm

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் குஜராத்திலும் மார்ச் 7 - 8 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

March 07th, 07:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் குஜராத்துக்கும் இன்றும் நாளையும் (மார்ச் 7 - 8 தேதிகளில்) பயணம் மேற்கொள்கிறார். இன்று சில்வாசாவுக்கு செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் நமோ மருத்துவமனையைத் (கட்டம் I) திறந்து வைப்பார். பிற்பகல் 2:45 மணியளவில், சில்வாசாவில் யூனியன் பிரதேசத்திற்கான ரூ.2580 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், அவர் சூரத் செல்கிறார். மாலை 5 மணியளவில், சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தைத் தொடங்கிவைப்பார். மார்ச் 8 ஆம் தேதி, பிரதமர் நவ்சாரிக்குச் செல்கிறார், காலை 11:30 மணியளவில், லட்சாதிபதி சகோதரிகளுடன் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொது நிகழ்வு நடைபெறும்.

டாமனில் நமோ பாதை, தேவகா கடல்முனை ஆகியவற்றை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

April 25th, 11:23 pm

5.45 கிலோமீட்டர் தூரம் கொண்ட தேவகா கடல்முனை ரூ. 165 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலமாகவும், சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து, அதன் மூலம் இந்த கடல்முனை உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்மிகு விளக்குகள், வாகன நிறுத்தும் வசதி, பூங்காக்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்த உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக இந்த கடற்கரை முகப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Balanced development of every region is a huge priority: PM Modi

April 25th, 04:50 pm

PM Modi laid the foundation stone and dedicated to the nation various development projects worth more than Rs 4850 crores at Silvassa, Dadra, and Nagar Haveli today. The projects included the dedication of NAMO Medical Education & Research Institute in Silvassa, and the laying of the foundation stone of 96 projects

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 25th, 04:49 pm

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். சில்வாசாவின் நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை அர்ப்பணித்ததும் டாமனில் அரசுப் பள்ளிகள், அரசு பொறியியல் கல்லூரி போன்ற 96 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், மற்ற சில பகுதிகளில் பல்வேறு சாலைகளை அழகுபடுத்துதல், வலுப்படுத்துதல், விரிவாக்குதல், மீன் சந்தை, வணிக வளாகம், குடிநீர் விநியோக மேம்பாடும் இந்த திட்டங்களில் அடங்கும். டியூ மற்றும் சில்வாசாவைச் சேர்ந்த, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுக்கு சாவிகளை பிரதமர் ஒப்படைத்தார்.

மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுக்கு வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் செல்கிறார்

April 21st, 03:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 24, 25ந் தேதிகளில் மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுக்கு செல்கிறார்.

டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த டுவிட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 07th, 11:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த பதிவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

வேலை வாய்ப்பு விழாவின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 22nd, 10:31 am

வேலை வாய்ப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள எனது இளம் நண்பர்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று 71,000 இளைஞர்களுக்கு நாட்டின் 45 நகரங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இல்லங்களில் முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 75,000 இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்.

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் விநியோகித்தார்

November 22nd, 10:30 am

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

கோவாவின் பனாஜியில் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி வாயிலாக பிரதமரின் உரை

August 19th, 04:51 pm

கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, கோவா அரசின் இதர அமைச்சர்களே, பெருமக்களே, தாய்மார்களே மற்றும் அன்பர்களே. இன்று மிகவும் முக்கியமான மற்றும் புனித தினம். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு வாழ்த்துகள்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

August 19th, 12:12 pm

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வு கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவாந்த், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஜென்மாஷ்டமி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.