This year's budget will give India's Reform Express new energy and new momentum: PM Modi
February 01st, 01:38 pm
In his remarks on Union Budget 2026, PM Modi said the budget is historic, serving as the basis for India’s high flight towards becoming a developed nation by 2047. He noted that the budget presents an ambitious roadmap to accelerate Make in India and the Atmanirbhar Bharat campaign. Reiterating FM Sitharaman’s statement that this is a budget for the Yuva Shakti, the PM congratulated her and her team for presenting a futuristic, sensitive budget.மத்திய பட்ஜெட் 2026 குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 01st, 01:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.02.2026) காணொலிக் காட்சியின் மூலம் மத்திய பட்ஜெட் 2026 குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர், இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு பெண் நிதி அமைச்சராக, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டது என்றும், இது நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரமளித்து, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன: பிரதமர்
September 04th, 08:43 pm
ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குவதிலும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
March 17th, 01:05 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 07th, 03:00 pm
நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 07th, 02:45 pm
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 01:00 pm
பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 01st, 12:30 pm
வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 24th, 10:36 am
உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு பியூஷ் கோயல் அவர்களே, தேசிய கூட்டுறவு சங்கக் குழுக்களின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
February 24th, 10:35 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.அமுல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 11:30 am
குஜராத் ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சகா திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, அமுல் நிறுவனத்தின் தலைவர் திரு ஷமல் பாய் அவர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
February 22nd, 10:44 am
அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 12:00 pm
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா, அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ஜி, சத்குரு ஆச்சார்யா பூஜ்ய ஸ்ரீ சுதந்திர தேவ் ஜி மகராஜ், பூஜ்ய ஸ்ரீ விக்யான் தேவ் ஜி மகராஜ், பிற முக்கிய நபர்கள், நாடு முழுவதிலுமிருந்து கூடியுள்ள அனைத்து பக்தர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம்!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 18th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.Gujarat has given the nation the practice of elections based on development: PM Modi in Jambusar
November 21st, 12:31 pm
In his second rally for the day at Jambusar, PM Modi enlightened people on how Gujarat has given the nation the practice of elections based on development and doing away with elections that only talked about corruption and scams. PM Modi further highlighted that Gujarat is able to give true benefits of schemes to the correct beneficiaries because of the double-engine government.There was a time when Gujarat didn't even manufacture cycles, today the state make planes: PM Modi in Surendranagar
November 21st, 12:10 pm
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a public meeting in Gujarat’s Surendranagar. Highlighting the ongoing wave of pro-incumbency in the state, PM Modi said, “Gujarat has given a new culture to the country's democracy. In the decades after independence, whenever elections were held, there was a lot of discussion about anti-incumbency. But Gujarat changed this tradition to pro-incumbency.”குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்
November 21st, 12:00 pm
தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். மாநிலத்தில் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவான அலையை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “ நாட்டின் ஜனநாயகத்திற்கு குஜராத் ஒரு புதிய கலாச்சாரத்தை வழங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களில், தேர்தல்கள் நடந்த போதெல்லாம், ஆட்சிக்கு எதிரானது பற்றி நிறைய விவாதிக்கப்பட்டது. ஆனால் குஜராத் இந்தப் பாரம்பரியத்தைப் பதவிக்கு ஆதரவாக என மாற்றியது என்றார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்
February 08th, 08:30 pm
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.