ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 12:45 pm
ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 12:30 pm
இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 26th, 02:20 pm
மேதகு பிரதமரும், எனது நண்பருமான அன்வர் இப்ராஹிம் அவர்களே,Prime Minister’s participation in the 22nd ASEAN-India Summit in Kuala Lumpur
October 26th, 02:06 pm
In his remarks at the 22nd ASEAN-India Summit, PM Modi extended his heartfelt congratulations to Malaysian PM Anwar Ibrahim for ASEAN’s successful chairmanship. The PM said that ASEAN is a key pillar of India’s Act East Policy and expressed confidence that the ASEAN Community Vision 2045 and the vision of a Viksit Bharat 2047 will together build a bright future for all humanity.This is the best time to invest, innovate and make in India: PM at IMC 2025
October 08th, 10:15 am
PM Modi inaugurated the 9th India Mobile Congress 2025 at Yashobhoomi, New Delhi. He highlighted startups’ work in 6G, quantum communication, semiconductors, and financial fraud prevention, along with India’s Made-in-India 4G stack and telecom growth. Emphasizing youth, innovation, and global partnerships, the PM outlined India’s vision for technological self-reliance and a leading role in future digital infrastructure.இந்திய மொபைல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 08th, 10:00 am
இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்
October 07th, 10:27 am
ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 01st, 10:14 am
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்
August 29th, 07:43 pm
இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவை. விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 29th, 03:59 pm
இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.பிரதமர் திரு நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்
August 27th, 08:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் மாண்புமிகு திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த தனது கருத்துக்களை அதிபர் திரு ஸ்டப் பகிர்ந்து கொண்டார்.ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள்
August 25th, 01:58 pm
ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்தியா - ஃபிஜி கூட்டு அறிக்கை: நட்புறவின் அடையாளமான கூட்டணி
August 25th, 01:52 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஃபிஜி குடியரசின் பிரதமர் திரு. சிதிவேனி ரபுகா, 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள பிரதமர் ரபுகா, அவரது துணைவியார், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சர் திரு. அன்டோனியோ லாலபலவு மற்றும் ஃபிஜி அரசின் மூத்த அதிகாரிகள் குழுவுடன் அவர் புதுதில்லி வந்துள்ளார்.ஃபிஜி பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 25th, 12:30 pm
அந்த நேரத்தில், நாங்கள் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தைத் (FIPIC) தொடங்கினோம். இந்த முயற்சி இந்திய-ஃபிஜி உறவுகளை மட்டுமல்லாமல், முழு பசிபிக் பிராந்தியத்துடனான எங்கள் உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது. இன்று, பிரதமர் திரு ரபுகாவின் வருகையுடன், எங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம்.பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவின் அதிபரைச் சந்தித்தார்
July 09th, 07:55 pm
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் மாண்புமிகு டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, அதிபர் நந்தி-நதைத்வா அன்புடன் வரவேற்று, சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். பிரதமர் அளவில் இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கான இந்தப் பயணம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளபட்ட பயணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் நந்தி-நதைத்வா நடத்திய முதல் இருதரப்பு அரசு முறை சந்திப்பும் இதுவாகும்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை
July 06th, 09:41 pm
பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
July 06th, 09:40 pm
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
July 06th, 09:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.