பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வரவேற்பளித்தார்.
November 27th, 10:03 pm
அண்மையில் பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்பளித்தார். அந்த வீராங்கனைகளுடன் திரு மோடி அன்புடன் உரையாடிய போது போட்டித்தொடர் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
November 24th, 12:23 pm
பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.The whole country is proud of you and watching you with admiration: PM Modi says to Women’s World Cup Champions
November 06th, 10:15 am
During his interaction with Women’s World Cup 2025 champions, PM Modi said they had truly accomplished something remarkable. The PM acknowledged the recurring challenges they faced and praised their courage and ability to instill confidence in others despite adversity. He encouraged them to advocate for Fit India and expressed his joy at having had the opportunity to interact with them.ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ஐ வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் உரையாடினார்
November 06th, 10:00 am
புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ல் கோப்பையை வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று உரையாடினார். 2025 நவம்பர் 02 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நாள் தேவ் தீபாவளி, குர்புரப் ஆகியவற்றை குறிப்பிடும் மிக மகத்துவமான நாள் என்று பிரதமர் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அணி பயிற்சியாளர் திரு அமோல் மஜூம்தார் அவரை சந்தித்தது கௌரவமிக்கது என்று கூறினார்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பிரதமரின் உரை
November 03rd, 11:00 am
இன்றைய நிகழ்வு அறிவியலுடன் தொடர்புடையது, ஆனால் முதலில் நான் கிரிக்கெட்டில் இந்தியாவின் அற்புதமான வெற்றியைப் பற்றிப் பேசுகிறேன். முழு இந்தியாவும் அதன் கிரிக்கெட் அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை. நமது மகளிர் கிரிக்கெட் அணியை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஊக்குவிக்கும்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் 2025 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 03rd, 10:30 am
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03 நவம்பர் 2025) உரையாற்றினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களை பிரதமர் வரவேற்றார்.PM Modi’s candid interaction with children successfully treated for congenital heart ailments in Chhattisgarh
November 01st, 05:30 pm
As part of the ‘Dil Ki Baat’ programme, PM Modi interacted with 2,500 children who were successfully treated for congenital heart diseases at Sri Sathya Sai Sanjeevani Hospital in Nava Raipur, Chhattisgarh. As the children shared their experiences, the PM expressed his joy in meeting them and advised them to practice yoga for a healthy body. He also informed them about the centenary year of Shri Sathya Sai Baba.பிறவி இதய கோளாறிலிருந்து மீண்டு வந்துள்ள குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 01st, 05:15 pm
இதயத்துடன் பேசுங்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, பிறவியிலேயே இதயக் கோளாறு பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள 2500 குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவினி மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.ஆசியைக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு
September 29th, 12:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள்
August 25th, 01:58 pm
ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.ஃபிஜி பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 25th, 12:30 pm
அந்த நேரத்தில், நாங்கள் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தைத் (FIPIC) தொடங்கினோம். இந்த முயற்சி இந்திய-ஃபிஜி உறவுகளை மட்டுமல்லாமல், முழு பசிபிக் பிராந்தியத்துடனான எங்கள் உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது. இன்று, பிரதமர் திரு ரபுகாவின் வருகையுடன், எங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம்.இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை
July 24th, 04:20 pm
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.PM Modi conferred with highest national award, the ‘Order of the Republic of Trinidad & Tobago
July 04th, 08:20 pm
PM Modi was conferred Trinidad & Tobago’s highest national honour — The Order of the Republic of Trinidad & Tobago — at a special ceremony in Port of Spain. He dedicated the award to the 1.4 billion Indians and the historic bonds of friendship between the two nations, rooted in shared heritage. PM Modi also reaffirmed his commitment to strengthening bilateral ties.இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வன்ஷியை பிரதமர் சந்தித்தார்
May 30th, 02:30 pm
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வன்ஷியையும், அவரது குடும்பத்தினரையும் இன்று பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். “அவரது கிரிக்கெட் ஆட்டத் திறன் ஒட்டு மொத்த நாட்டிலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” என்று திரு மோடி கூறியுள்ளார்.காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 27th, 11:30 am
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 27th, 11:09 am
குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.