பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 11:38 pm
சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
July 07th, 11:13 pm
பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:05 pm
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.