Prime Minister Speaks with President of France
March 19th, 05:05 pm
PM Modi held a conversation with French President Emmanuel Macron and discussed the situation in West Asia. Both leaders stressed the need for de-escalation and looked forward to continuing their close coordination to advance peace and stability in the region and beyond.பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் உரையாடினார்
March 02nd, 07:20 am
தற்போதைய பிராந்திய சூழல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்
June 24th, 09:54 pm
மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் காந்திஜிக்கும் இடையிலான உரையாடல் பற்றிய நூற்றாண்டு விழா கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 24th, 11:30 am
பிரம்மரிஷி சுவாமி சச்சிதானந்தா அவர்களே, ஸ்ரீமத் ஸ்வாமி சுபங்கா-நந்தா அவர்களே சுவாமி சாரதானந்தா அவர்களே, அனைத்து மரியாதைக்குரிய துறவிகளே, மத்திய அரசில் எனது நண்பர் திரு ஜார்ஜ் குரியன் அவர்களே, பாராளுமன்றத்தில் எனது நண்பர் திரு அடூர் பிரகாஷ் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே.ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 24th, 11:00 am
இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையைக் காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சுதந்திரத்தின் நோக்கங்களுக்கு வலுவான அர்த்தத்தையும், சுதந்திர இந்தியாவின் கனவையும் எடுத்துரைப்பதாக இருந்தது என்று அவர் கூறினார். “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. மேலும் சமூக நல்லிணக்கத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டான இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்திமிக்க ஆதாரமாக திகழ்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களில் பணிந்து மரியாதை செலுத்திய அவர் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டினார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது பதவிக் காலத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்
May 06th, 02:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திரு அந்தோணி அல்பானீஸுடன் தொலைபேசி மூலம் உரையாடி ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் ஆழமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 15th, 07:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில், புகழ்பெற்ற போட்காஸ்டரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் உரையாடலை மேற்கொண்டார். மூன்று மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் குழந்தைப் பருவம், இமயமலையில் கழித்த ஆரம்ப ஆண்டுகள், பொது வாழ்க்கையில் அவரது பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற்றன. புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும் போட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் (Lex Fridman) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மூன்று மணி நேர போட்காஸ்ட் நாளை (2025 மார்ச் 16) வெளியிடப்பட உள்ளது. லெக்ஸ் ஃப்ரிட்மேன் இந்த உரையாடலை தமது வாழ்க்கையின் மிகவும் சக்திவாய்ந்த உரையாடல்களில் ஒன்று என்று பிரதமர் விவரித்துள்ளார்.Politics is about winning people's hearts, says PM Modi in podcast with Nikhil Kamath
January 10th, 02:15 pm
Prime Minister Narendra Modi engages in a deep and insightful conversation with entrepreneur and investor Nikhil Kamath. In this discussion, they explore India's remarkable growth journey, PM Modi's personal life story, the challenges he has faced, his successes and the crucial role of youth in shaping the future of politics."பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்"
January 10th, 02:00 pm
தொழில்முனைவோர் நிகில் காமத் உடனான தனது முதலாவது போட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த ஆரம்ப அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போட்காஸ்ட், பிரதமரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தமது ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் எவ்வாறு தம்மிடம் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதையும், இந்த அனுபவங்கள் தேசம் முதலில் என்ற சித்தாந்தத்திற்கும் அவரது அர்ப்பணிப்புக்கும் எவ்வாறு அடித்தளம் அமைத்தன என்பதையும் அவர் விவரித்தார்.