பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் நாளை (29.09.2018) கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்ற மாநாட்டை தொடங்கி வைக்கிறார்
September 28th, 12:24 pm
கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்பது குறித்த மாநாடு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (29.09.2018) நடைபெறுகிறது. 350க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் / இயக்குநர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப சபை, இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சி சபை, இந்திராகாந்தி தேசிய கலை மையம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஸ்ரீகோவிந்த் சிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.