In India, democracy means last mile delivery: PM Modi at 28th CSPOC
January 15th, 11:00 am
In his address while inaugurating the 28th CSPOC at the Central Hall of Samvidhan Sadan, PM Modi highlighted India’s democratic journey. Remarking that India is the mother of democracy, the PM noted the increasing representation of women in government bodies and persity of Indian languages. He further highlighted that India has begun using AI in Parliament to improve its functioning.காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 15th, 10:32 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவைத் தலைவரின் பங்கு தனித்துவமானது என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதிகம் பேச வாய்ப்பில்லை என்றாலும், அவர்களின் பொறுப்பு மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும், அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்வதும் ஆகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களைக் கூட புன்னகையுடன் கையாள்வது அவைத் தலைவர்களின் பொதுவான பண்பு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.காமன்வெல்த் நாடுகளின் நாடளுமன்ற அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 14th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஜனவரி 15) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் நாடளுமன்ற அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.