மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

September 11th, 09:11 am

மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தில்லியின் சத்யா நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் நேரிட்ட உயிரிழப்புக்குப் பிரதமர் இரங்கல்

September 06th, 08:24 pm

தில்லியின் சத்யா நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

பிரபல குஜராத்தி இசையமைப்பாளர் கௌரங் வியாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

September 03rd, 12:25 pm

குஜராத்தி இசை உலகின் பிரபல இசையமைப்பாளராகத் திகழ்ந்த கௌரங் வியாஸ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நி்கழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்

September 02nd, 07:46 pm

மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.09.2026) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

PM condoles loss of lives in firecracker factory mishap in Kaushambi

August 31st, 10:00 pm

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the loss of lives in a mishap at a firecracker factory in Kaushambi, Uttar Pradesh. Shri Modi conveyed his condolences to the bereaved families and prayed for the speedy recovery of the injured.

நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு மன்னர் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

August 28th, 04:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் நார்வே நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது மன்னரைச் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள திரு நரேந்திர மோடி, நார்வே மக்கள் மீதும், அந்த தேசத்தின் மீதும் அவரது அன்பையும் ஆழ்ந்த சேவை மனப்பான்மையையும் குறிப்பிட்டார்.

திரு ஏ பாலகிருஷ்ணனின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல்

August 27th, 12:11 pm

விவேகானந்த கேந்திர அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றிய திரு ஏ பாலகிருஷ்ணனின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்காகவும், தேச சேவைக்காகவும் தனது வாழ்நாளின் சுமார் 50 ஆண்டுகளை அவர் அர்ப்பணித்ததைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமூகத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவு கூர்ந்தார். அவருக்கு வடகிழக்கு பிராந்தியத்துடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. கல்வி, சமூகம், நாட்டை கட்டமைக்கும் பணிகளில் அவர் முக்கிய பங்காற்றினார் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு - வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்

August 26th, 06:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் திரு பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசியதோடு, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளுக்கு இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

தெலங்கானாவின் சூர்யபேட்டையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

August 26th, 02:21 pm

தெலங்கானாவின் சூர்யபேட்டையில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

August 19th, 02:34 pm

கொல்கத்தாவில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

August 17th, 01:32 pm

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்

August 17th, 12:08 pm

பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

August 08th, 11:52 am

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் தமது எண்ணங்கள் உள்ளதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் எனவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கல்வியாளர் திரு டி.ஒய். பாட்டீல் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

August 04th, 03:57 pm

பிரபல கல்வியாளரும் சமூகச் சேவகருமான திரு டி.ஒய். பாட்டீல் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு டி.ஒய். பாட்டீல் அவர்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் என்று பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

Prime Minister expresses grief over loss of lives due to building collapse in Thane

July 31st, 01:08 pm

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to the collapse of a building in Thane, Maharashtra.

சிக்கிம் மாநிலம் நம்சியில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

July 21st, 01:01 pm

சிக்கிம் மாநிலம் நம்சியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 18th, 09:00 pm

முன்னாள் பிரதமர் திரு தேவ கௌடாவின் மனைவி திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். திருமதி சென்னம்மா அவர்கள், பணிவு மற்றும் சமூக சேவைக்கான பேரார்வத்திற்காகப் போற்றப்பட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

July 18th, 07:13 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்

July 13th, 09:55 pm

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

July 12th, 03:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.