திரு பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

October 24th, 11:29 am

விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு உலகின் முதுபெரும் ஆளுமை திரு பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விளம்பர தளத்தில் திரு பாண்டேயின் அசாதாரணமான படைப்பூக்கம் மற்றும் சிறந்த பங்களிப்புகளை பிரதமர் தனது இதயப்பூர்வமான அஞ்சலி செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

This is the best time to invest, innovate and make in India: PM at IMC 2025

October 08th, 10:15 am

PM Modi inaugurated the 9th India Mobile Congress 2025 at Yashobhoomi, New Delhi. He highlighted startups’ work in 6G, quantum communication, semiconductors, and financial fraud prevention, along with India’s Made-in-India 4G stack and telecom growth. Emphasizing youth, innovation, and global partnerships, the PM outlined India’s vision for technological self-reliance and a leading role in future digital infrastructure.

இந்திய மொபைல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

October 08th, 10:00 am

இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

பயிற்சி முடித்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள், பிரதமருடன் சந்திப்பு

August 19th, 08:34 pm

2024-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் பயிற்சி முடித்த அதிகாரிகள் தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33 இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்

June 18th, 12:32 pm

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

அகமதாபாத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

June 12th, 04:15 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுத்துறைச் செயலாளர்களுடனான உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்

May 08th, 02:17 pm

தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய தயார்நிலை குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காகவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களுடனான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (08.05.2025) நடைபெற்றது.

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை

January 15th, 11:08 am

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

January 15th, 10:30 am

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.

'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

October 19th, 06:57 pm

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.

உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 17th, 04:03 pm

140 கோடி இந்தியர்களின் சார்பாக, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வுக்கு உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் குரல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் உலகின் மிகவும் தனித்துவமான தளமாகும். நாம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகள், ஆனால் நமக்குள் ஒரே நலன்கள், ஒரே முன்னுரிமைகள் உள்ளன.

பெங்களுருவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 20th, 02:46 pm

கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும்.

PM inaugurates and lays the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru

June 20th, 02:45 pm

The Prime Minister, Shri Narendra Modi inaugurated and laid the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru today. Earlier, the Prime Minister inaugurated the Centre for Brain Research and laid the foundation Stone for Bagchi Parthasarathy Multispeciality Hospital at IISc Bengaluru.

தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

March 02nd, 10:49 am

எங்கள் அரசுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் தனித்தனியான துறை அல்ல. பொருளாதாரத் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதே போல் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்தல் தொடர்பான பார்வையில் நவீன தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கினை வகிக்கிறது. நாட்டின் சமானிய குடிமக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. நாட்டினை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இன்று காலை அமெரி்க்க அதிபர் பைடனின், பேச்சு நீங்கள் கேட்டிருப்பீர்கள், அவர்கூட, தற்சார்பு அமெரிக்கா பற்றி பேசுகிறார். ‘அமெரிக்காவில் உற்பத்தி’ என்பதற்கு அவர் மகத்தான அழுத்தம் தந்திருக்கிறார். எனவே, உலகின் புதிய நடைமுறை துவக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிகிறோம்.

‘தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 02nd, 10:32 am

பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், “பட்ஜெட்டின் வெளிச்சத்தில் இதில் உள்ள அம்சங்களில் விரைவாகவும், தடையின்றியும், அதிகபட்ச பயனுடனும் நாம் எவ்வாறு அமலாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியாகும் இது” என்றார்.

Double engine government knows how to set big goals and achieve them: PM Modi

December 28th, 01:49 pm

PM Narendra Modi inaugurated Kanpur Metro Rail Project and Bina-Panki Multiproduct Pipeline Project. Commenting on the work culture of adhering to deadlines, the Prime Minister said that double engine government works day and night to complete the initiatives for which the foundation stones have been laid.

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .

December 28th, 01:46 pm

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

PM’s remarks at review meeting with districts having low vaccination coverage

November 03rd, 01:49 pm

கிளாஸ்கோவிலிருந்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு.நரேந்திர மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்

November 03rd, 01:30 pm

கிளாஸ்கோவிலிருந்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு.நரேந்திர மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நாஸ்காம் தொழில்நுட்ப, தலைமைத்துவ அமைப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

February 17th, 12:31 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.