2030 நோக்கி: ஒரு கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்

January 27th, 06:48 pm

புது தில்லியில் ஜனவரி 27, 2026 அன்று நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல், இரு கூட்டாளிகளுக்கும் மற்றும் பரந்த உலகிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும், உறுதியான மற்றும் மாற்றத்தக்க விளைவுகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா - ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரின் இந்தியாவிற்கான அரசு முறை வருகை மற்றும் 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கை

January 27th, 06:15 pm

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்தியாவின் 77வது குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினர்களாக இந்தியாவிற்கு அரசு முறை விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, ​​இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தலைவர்கள் பாராட்டினர் மற்றும் 2030 நோக்கி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டனர்.

Prime Minister holds bilateral talks with the Prime Minister of Ethiopia

December 17th, 12:02 am

During his visit to Ethiopia, PM Modi held discussions with Ethiopian PM Dr. Abiy Ahmed Ali in Addis Ababa. Both leaders reviewed the entire spectrum of the bilateral relationship and agreed to elevate the ties to the level of a Strategic Partnership. PM Modi thanked Ethiopia for its solidarity in the wake of the Pahalgam terror attack. Following the talks, the two leaders witnessed the exchange of MoUs.

எரிசக்தி பாதுகாப்பு குறித்த ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஜூன் 17, 2025)

June 18th, 11:15 am

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்கும், சிறந்த வரவேற்புக்கும் கனடா பிரதமர் கார்னிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-7 கூட்டமைப்பின் 50 ஆண்டு நிறைவையொட்டி, வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை

June 18th, 11:13 am

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அங்கோலா அதிபருடனான கூட்டு ஊடக அறிக்கையின் போது பிரதமரின் உரை (மே 03, 2025)

May 03rd, 01:00 pm

இந்தியாவிற்கு அதிபர் லூரென்சோ மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கோலா அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவரது வருகை இந்தியா-அங்கோலா உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் தருவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.

சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போதுவெளியிடப்பட்ட கூட்டறிக்கை

April 23rd, 12:44 pm

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

July 10th, 02:45 pm

அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் பிரதமர் நெஹாமருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சிறப்பானதாகும். நமது இருதரப்பு உறவுகள் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் நடைபெறுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும்.

உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 17th, 04:03 pm

140 கோடி இந்தியர்களின் சார்பாக, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வுக்கு உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் குரல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் உலகின் மிகவும் தனித்துவமான தளமாகும். நாம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகள், ஆனால் நமக்குள் ஒரே நலன்கள், ஒரே முன்னுரிமைகள் உள்ளன.