இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்

October 07th, 10:27 am

ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.