ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர்

August 14th, 04:55 pm

ஜம்மு - காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கவலைத் தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் அனைத்து உதவிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.