இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தகம், கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருடன் பேச்சு நடத்தினார்
June 17th, 11:54 pm
கனடாவில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே மெக்சிகோ அதிபர் டாக்டர் கிளாடியா ஷீன்பாம் பர்டோவை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.