India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi
January 03rd, 12:00 pm
PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
January 03rd, 11:30 am
புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பகவான் மகாவீரருக்கு பிரதமர் மரியாதை
April 10th, 08:44 am
மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகவான் மகாவீரருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பகவான் மகாவீரர் எப்போதும் அகிம்சை, உண்மை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தி வந்தவர் என்றும், அவரது கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வலிமையை அளிக்கின்றன என்றும் திரு மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை அரசு வழங்கியதாகவும், அந்த முடிவு பலரது பாராட்டைப் பெற்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
April 03rd, 05:43 pm
பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமர் திருமதி பாய்டோங்டார்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அழகிய மொழியில் பகவான் புத்தரது போதனைகளின் சாரத்தை இது கொண்டிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.மொழி கெளரவிப்பு வார விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 03rd, 06:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அசாம் மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மொழி கெளரவிப்பு வார விழாவின் #BhashaGauravSaptah முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிராந்தியத்தின் வளமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கீகாரம் என்ற வகையில், அசாமம் மொழி அண்மையில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அவர் கொண்டாடினார்.பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
October 24th, 10:43 am
பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.அக்டோபர் 17 அன்று சர்வதேச அபிதாம்மா தினம் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரித்தற்கான கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
October 15th, 09:14 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் அக்டோபர் 17 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் சர்வதேச அபிதாம்மா தினம் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக செம்மொழியாக அங்கீகரித்தற்கான கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.