புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
September 24th, 06:33 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi
September 12th, 04:54 pm
In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 12th, 04:45 pm
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்கிடையே, மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் திரு மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் சந்திப்பு
August 31st, 04:50 pm
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் கொள்கைகள் ஆகிய இந்திய கொள்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மருடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.தியான்ஜினில் சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
August 31st, 11:06 am
உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நேர்மறையான பாதையை அளித்தது. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியும் ஸ்திரத்தன்மையும் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி மேலாண்மை குறித்து நமது சிறப்பு பிரதிநிதிகள் ஒரு புரிதலை எட்டியுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் தொடங்கப்படுகின்றன. நமக்கு இடையேயான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு
August 31st, 11:00 am
சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் வந்தடைந்தார்
August 30th, 04:00 pm
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சீனா வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்திப்பார்.அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
August 28th, 08:40 pm
ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்
August 22nd, 06:15 pm
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
August 19th, 07:34 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான திரு. வாங் யியை இன்று சந்தித்தார்.மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ASPI இன் முக்கியமான தொழில்நுட்ப டிராக்கரில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவின் இடத்தைப் பாராட்டினார்.
October 03rd, 07:35 pm
ASPI முக்கியமான தொழில்நுட்ப டிராக்கரின்படி, 64 தொழில்நுட்பங்களில் 45ல் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இப்போது இடம்பிடித்துள்ளது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான இனம் மற்றும் உலகளாவிய திறமைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை இந்த ஆய்வு கண்காணிக்கிறது. உலகின் மிக முக்கியமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டை ஆதரிக்கும் முக்கியமான பொருட்களையும், அது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை எவ்வாறு அளவிடுகிறது என்பதையும் இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது.2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நவம்பர் 1-ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
October 31st, 05:04 pm
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் 2023 நவம்பர் 1-ம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் அசாதாரண செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு
October 28th, 11:13 pm
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 111 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், உத்வேகத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சதுரங்கத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலிக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:48 pm
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியின் பி2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிஷன் கங்கோலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோரே, விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:45 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் சதுரங்க பி 1 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோர், விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:44 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 2 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:38 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் வாழ்த்து
October 28th, 08:35 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்குப் பிரதமர் வாழ்த்து
October 28th, 08:32 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:50 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.