A stronger India-Uzbekistan partnership will be powerful force for peace, progress, prosperity in Central Asia: PM Modi at Joint Press Meet

August 30th, 01:30 pm

At the India-Uzbekistan Joint Press Meet, PM Modi praised President Shavkat Mirziyoyev for his positive and visionary outlook and deep friendship towards India. As bilateral ties are elevated to a Comprehensive Strategic Partnership, PM Modi announced a $5 billion trade target by 2030 and plans to enhance win-win cooperation in infrastructure development, while highlighting growing cooperation across sectors.

சதுரங்க ஒலிம்பியாட் வெற்றியாளர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

September 26th, 12:15 pm

இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களையும் வெல்வது இதுவே முதல் முறை, அந்த அணி செயல்பட்ட விதம் குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 22க்கு 21 புள்ளிகளும், பெண்கள் 22க்கு 19 புள்ளிகளும் பெற்றனர். மொத்தத்தில், 44 க்கு 40 புள்ளிகளைப் பெற்றோம். இவ்வளவு பெரிய மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் இதற்கு முன்பு நடந்ததில்லை.

பிரதமர் மோடி நமது செஸ் சாம்பியன்களை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்

September 26th, 12:00 pm

வரலாற்று சிறப்புமிக்க இரட்டை தங்கம் வென்ற பிறகு இந்திய செஸ் அணியினருடன் பிரதமர் மோடி பேசினார். இந்த கலந்துரையாடல் அவர்களின் கடின உழைப்பு, சதுரங்கத்தின் வளர்ந்து வரும் பிரபலம், விளையாட்டில் AI இன் தாக்கம் மற்றும் வெற்றியை அடைவதில் உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை

August 13th, 11:31 am

உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.

காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு

August 13th, 11:30 am

காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டு

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

July 29th, 09:10 am

இந்தப் போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். மிகக் குறுகிய காலத்தில் அவர்கள், மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று இந்தியாவில் உள்ள நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், விருந்தோம்பலை போற்றிப் பாடிய திருவள்ளுவர், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதாக பிரதமர் அறிவித்தார்

July 28th, 09:37 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

July 26th, 12:52 pm

2022 ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஜூலை 28 அன்று நண்பகல் 12 மணியளவில் சபர்கந்தாவின் கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால்பண்ணையில் பல்வகைத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதன் பின் சென்னை செல்லவிருக்கும் பிரதமர், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் பிற்பகல் 6 மணியளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைப்பார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் கலந்துரையாடிய போது பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

July 20th, 10:01 am

உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை நேரடியாக நான் சந்திக்க முடிந்திருந்தால், நான் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஆனால் உங்களில் பலர் இப்போதும் வெளிநாடுகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். மறுபக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் நானும் கூடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்தியக் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 20th, 10:00 am

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களும், அவர்களது பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டுத் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 19th, 05:01 pm

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் அவர்களே, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களே, அதிகாரிகளே, செஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுகளின் பிரதிநிதிகளே, மாநில அரசின் பிரதிநிதிகளே, பிற துறைகளின் உயரதிகாரிகளே, செஸ் ஒலிம்பியாட் குழு உறுப்பினர்களே, செஸ் விளையாட்டு வீரர்களே, சகோதர, சகோதரிகளே,

PM launches historic torch relay for 44th Chess Olympiad

June 19th, 05:00 pm

Prime Minister Modi launched the historic torch relay for the 44th Chess Olympiad at Indira Gandhi Stadium, New Delhi. PM Modi remarked, We are proud that a sport, starting from its birthplace and leaving its mark all over the world, has become a passion for many countries.”

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை 19 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

June 17th, 04:47 pm

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 19 ஜுன் அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.