A stronger India-Uzbekistan partnership will be powerful force for peace, progress, prosperity in Central Asia: PM Modi at Joint Press Meet
August 30th, 01:30 pm
At the India-Uzbekistan Joint Press Meet, PM Modi praised President Shavkat Mirziyoyev for his positive and visionary outlook and deep friendship towards India. As bilateral ties are elevated to a Comprehensive Strategic Partnership, PM Modi announced a $5 billion trade target by 2030 and plans to enhance win-win cooperation in infrastructure development, while highlighting growing cooperation across sectors.பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்கு பிரதமர் வாழ்த்து
June 06th, 02:16 pm
நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அவரது தொடர்ச்சியான சிறப்புத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த மைல்கல் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் வாழ்த்து
December 31st, 09:04 am
தோஹாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே-வின் (FIDE) உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.12.2025) வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஃபிடே ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறிது நேரத்திலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது உலக செஸ் அரங்கில் இந்தியாவிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணமாகும்.2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் எரிகைசிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:38 pm
தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய மன உறுதி குறிப்பிடத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:35 pm
தோஹாவில் நடைபெற்ற 2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டியில் அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.ஃபிடே உலகக் கோப்பை போட்டி இந்தியாவிற்கு மீண்டும் வருவதைப் பிரதமர் வரவேற்றுள்ளார்
August 26th, 11:30 pm
இரண்டு தசாப்தங்களுக்குப் பின் ஃபிடே போட்டி இந்திய மண்ணிற்கு மீண்டும் வருவதைக் குறிக்கும் வகையில், மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்த இந்தியா தயாராகி வருவதால், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகுந்த பெருமையையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 29th, 06:00 am
2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் மேலும் பிரபலமடைய பங்களிக்கும் என்று திரு. மோடி கூறினார்.ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து
July 28th, 06:29 pm
ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொனேரு ஹம்பியும், இப்போட்டி முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இரு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதியில் அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள திவ்யா தேஷ்முக்கை பிரதமர் பாராட்டியுள்ளார்
June 19th, 02:00 pm
லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதி இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஹூ இஃபானுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.2025 நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த குகேஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 02nd, 08:23 pm
2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததற்காக குகேஷுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான அவரது முதல் வெற்றி, அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. என்று திரு மோடி கூறினார்.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தார்
January 03rd, 08:42 pm
செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவிற்கு மிகுந்த பெருமையைத் தேடித் தந்ததற்காக அவரைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கூர்மையான அறிவாற்றல், அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.2024 ஃபிடே மகளிர் உலக விரைவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்குப் பிரதமர் வாழ்த்து
December 29th, 03:34 pm
2024 ஃபிடே மகளிர் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார் . அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒன்று என்று அவர் பாராட்டியுள்ளார்.செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு
December 28th, 06:34 pm
செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 12th, 07:35 pm
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி -க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.அர்ஜுன் எரிகேசி செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
October 27th, 11:08 am
செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
September 23rd, 01:15 am
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகள் அவர்களின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்காக அவரால் பாராட்டப்பட்டன.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 06:01 pm
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.