மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 03:30 pm
புனிதமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. நான்காயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை சிறப்பாக மாற்றும். பொருளாதாரத்தை மேம்படுத்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். விவசாயிகள் சந்தைகளை அடைய சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயண அனுபவம் ஏற்படும். வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து கிடைக்கும். உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களை மேம்படுத்துவதாகும்.மதுரையில் ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
March 01st, 03:00 pm
தமிழ்நாட்டின் மதுரையில் இன்று ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புனித நகரமான மதுரையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இது தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயம் என்று கூறினார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மாற்றி அமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மாநிலத்தில் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது மக்களை மேம்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மேம்பாடுகள் விவசாயிகள், சந்தைகளை அடைய சிறந்த சாலைகள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயணம், வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து ஆகியவற்றை வழங்கும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
February 27th, 04:40 pm
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 மார்ச் 1 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்திற்குப் பின், பிப்ரவரி 28 அன்று இரவு 9 மணியளவில் பிரதமர் சென்னை வருகிறார்.மினிக்காய்,துண்டி கடற்கரை, கட்மாட் கடற்கரை ஆகியவை தூய்மையான கடற்கரைகள் பட்டியலில்சேர்க்கப்பட்டிருப்பதற்காக லட்சத்தீவின் மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்
October 26th, 07:05 pm
உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் முத்திரையை மினிக்காய், துண்டி கடற்கரை, கட்மாட் கடற்கரை ஆகியவை பெற்று தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக லட்சத்தீவின் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர், கடற்கரை தூய்மையை மேலும் அதிகரிக்க இந்தியர்களிடம் உள்ள ஆர்வத்தைப் பாராட்டினார்.தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் சென்னையில் ஆற்றிய உரை
February 14th, 11:31 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 14th, 11:30 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம், கேரளாவுக்கு பிரதமர் பயணம்
February 12th, 06:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், அன்று காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள், இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகத்தை அளிப்பதுடன், முழுமையான வளர்ச்சி ஆற்றலை கொண்டு வரும் வேகத்துக்கு பெரிதும் உதவும்.