The development schemes of the Central and State governments empower women: PM Modi

September 26th, 03:00 pm

While interacting with beneficiaries of Bihar’s Mukhyamantri Mahila Rojgar Yojana, PM Modi said that every initiative of the Central and State governments is aimed at women’s welfare and empowerment. Beneficiaries shared their success stories, showcasing the schemes’ impact. The PM urged women to continue sharing such inspirational accounts of how government programs are bringing positive change in society.

பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

September 26th, 02:49 pm

பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பீகார் மாநிலம் மோதிஹரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 18th, 11:50 am

இந்த புனிதமான சாவான் மாதத்தில், பீகார் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவதற்காக நான் பாபா சோமேஷ்வர்நாத்தின் பாதங்களை வணங்கி, அவரது ஆசிகளை வேண்டுகிறேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரி்ன் மோத்திஹரியில் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்

July 18th, 11:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் மோத்திஹரியில் இன்று (18.07.2025) 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

April 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆ ம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி

November 01st, 04:01 pm

பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

November 01st, 03:54 pm

தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''

பிகாரின் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறை காரணமாக மூடப்பட்டன: பிரதமர்

November 01st, 02:55 pm

மோட்டிஹரியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ``காட்டாட்சி முறை'' மீண்டும் வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிகாரில் சிறப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்துத் தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறையால் மூடப்பட்டன என்று அவர் கூறினார்.

பீகாரில் ‘இரட்டை இளவரசர்களை’’ தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும்: பிரதமர் மோடி

November 01st, 10:50 am

சப்ராவில் நடந்த தேர்தல் பேரணியில் மெகா கூட்டணி பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, சிறந்த எதிர்காலத்திற்கு, ‘‘சுயநல’’ சக்திகளை விரட்ட வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 13th, 12:01 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். துர்காபூர் –பங்கா பிரிவில், பாரதிப் –ஹால்தியா- துர்காபூர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் இத்திட்டங்களில் அடங்கும். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை இவற்றை நிர்மாணித்துள்ளன.

பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 13th, 12:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். துர்காபூர் –பங்கா பிரிவில், பாரதிப் –ஹால்தியா- துர்காபூர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் இத்திட்டங்களில் அடங்கும். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை இவற்றை நிர்மாணித்துள்ளன.

பீகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்களை செப்டம்பர் 13ம் தேதி பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார்

September 11th, 06:35 pm

பீகாரில் பெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்களை செப்டம்பர் 13ம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டங்களில் துர்காபூர்-பாங்கா பிரிவு உட்பட பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் ஆலைகளும் அடங்கும். இவற்றை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் அமைக்கின்றன.

பீகார், மோத்திஹரியில் நடைபெற்ற சம்பரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

April 10th, 01:32 pm

20,000 க்கும் மேற்பட்ட தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலங்களில், பீகார் எப்போதுமே வழி காட்டியது, காந்தியை மகாத்மா என்று மாற்றியமைத்த இடம்தான் சாம்பரன் என்று பிரதமர் மோடி கூறினார். மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மின் ரெயில் எஞ்சினைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 12 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட நவீன மின் ரெயில் எஞ்சின் கொண்ட சீனா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் உட்பட நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியா ஐந்தாவதாக இணைந்துள்ளது.

தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

April 10th, 01:30 pm

தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே சாம்பரானில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்

April 09th, 02:57 pm

பீகாரில் சாம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.

வடகிழக்கின் மேம்பாடு நம்முடைய முன்னுரிமை: பிரதமர் மோடி அவர்கள்

May 07th, 01:15 pm

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஷிலாங்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். சுவாமி பிரனவானந்தா அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, ஸ்ரீ மோடி அவர்கள், “சுவாமி பிரனவானந்தா அவர்கள் தமது சீடர்களைச் சேவை மற்றும் ஆன்மீகத்தில் இணைத்தார். 'பக்தி’யின் மூலம் சமூக மேம்பாடு, சுவாமி பிரனவானந்தா அவர்களால் 'சக்தி' மற்றும் 'ஜன் சக்தி' அடையப்பட்டது.” பிரதமர் வடகிழக்கில் தூய்மையைக்காக உழைக்கவேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். வடகிழக்கின் மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.

சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017

April 10th, 08:29 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

Aim of Satyagraha was independence and aim of Swachhagraha is to create a clean India: PM Modi

April 10th, 06:21 pm

PM Narendra Modi addressed a select gathering after inaugurating an exhibition entitled ‘Swachchhagrah – Bapu Ko Karyanjali’ - to mark the 100 years of Mahatma Gandhi’s Champaran Satyagraha. He also launched an online interactive quiz. “The aim of Satyagraha was independence and the aim of Swachhagraha is to create a clean India. A clean India helps the poor the most”, the PM said.

சம்பாரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு: சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) கண்காட்சியை பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்.

April 09th, 08:07 pm

“சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை – ஒரு இயக்கம், ஒரு கண்காட்சி” எனும் தலைப்பில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். மகாத்மா காந்தியடிகள் முதல் முதலாக சம்பாரனில் நடத்திய சத்தியாகிரகத்தின் 100 ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி தேசிய காப்பகம் நடத்தும் “நேரலையில் இணைய வழியில் கலந்துரையாடக்கூடிய வினாடி வினா” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்.