ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 18th, 05:00 am

முதலாவதாக, இந்த வட்டமேஜை மாநாட்டிற்கு என்னை அழைத்ததற்காகப் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டெர்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுமைப் புனைவுகளுக்குப் பெயர் பெற்றது மட்டுமின்றி, ஐரோப்பாவின் உற்பத்தித் திறனின் துடிப்பான அடையாளமாகவும் திகழும் கோதன்பர்க் நகரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

May 17th, 12:12 am

சுவீடனின் கோதன்பர்க்கில் 2026 மே 17 அன்று நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வால்வோ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடலில், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய முன்னணி தொழில்துறை தலைவர்கள், முன்னணி ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய-நெதர்லாந்து தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 16th, 10:00 pm

உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் இன்று இங்கு இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 300க்கும் மேற்பட்ட நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் மீது நீங்கள் வைத்துள்ள தொலைநோக்கு பார்வையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குள் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் நெதர்லாந்து திகழ்கிறது.

ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை கூட்டத்தில் பொறுப்பான ஏஐ குறித்த உலகளாவிய உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்தார்

February 19th, 10:05 pm

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் உலக பங்குதாரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்த ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டத்தின் விளைவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.