சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை -1 & 2 கட்டிடங்களை பிப்ரவரி 13-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
February 12th, 12:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 13, 2026 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் சேவா தீர்த்தம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டிட வளாகத்தின் பெயர் பலகையை திறந்து வைக்கிறார். பின்னர், சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை - 1 & 2 கட்டிடங்களை அவர் முறைப்படி திறந்து வைக்கிறார். மேலும், மாலை 6 மணியளவில் சேவா தீர்த்த வளாகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலை-II திட்டங்களின் தில்லி பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 17th, 12:45 pm
எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்
August 17th, 12:39 pm
தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் துவாரகா என்றும், நிகழ்ச்சி ரோஹிணியில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்
August 04th, 05:44 pm
தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.