மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

March 10th, 10:35 am

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) அனைத்து பணியாளர்களுக்கும் அந்தப் படையின் நிறுவன தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உறுதிப்பாடு, ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற சிஐஎஸ்எஃப், நாடு முழுவதும் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பங்களிக்கிறது என்று திரு நரேந்தி்ர மோடி கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்குகிறார்

August 27th, 07:08 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 ஆகஸ்ட் 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

மத்திய தொழில் பாதுகாப்புப்படை நிறுவனத் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

March 10th, 08:30 am

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தையொட்டி அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.