Prime Minister extends greetings to the people of Sikkim on Statehood Day
May 16th, 01:32 pm
The Prime Minister, Shri Narendra Modi, today extended greetings to the people of Sikkim on the occasion of the State’s Statehood Day, marking a historic milestone as Sikkim celebrates its 50th Statehood Day this year. Shri Modi remarked that the contribution of Sikkim to India’s development journey is deeply valued and appreciated. Recalling his recent visit to Sikkim during the 50th Statehood Day celebrations, the Prime Minister said that he was deeply touched by the warmth and affection shown by the people of the State.மே 10-11 தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்
May 09th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 10-ம் தேதி இரவு, அவர் ஜாம்நகர் வருகிறார். மே 11-ம் தேதி காலை 10:15 மணியளவில், சோம்நாத் கோயிலில் நடைபெறும் 'சோம்நாத் அமுதப் பெருவிழாவில்' பிரதமர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, வதோதரா செல்லும் அவர், அங்கு மாலை 6 மணியளவில் 'சர்தார்தாம் விடுதி'யை திறந்து வைக்கிறார். இவ்விரு நிகழ்வுகளிலும் திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.மே 10 அன்று கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்
May 09th, 11:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டு மே 10-ம் தேதி, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்கிறார். காலை 11 மணியளவில், பெங்களுருவில் நடைபெறும் 'வாழும் கலை' அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர், அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் ஹைதராபாத் செல்கிறார். பிற்பகல் 3 மணியளவில், ஹைதராபாத்தில் ரூ 9,400 கோடி மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில்,அவர் உரையாற்றுகிறார். பிற்பகல் 3:45 மணியளவில், ஹைதராபாத்தில் அமைந்துள்ள 'சிந்து மருத்துவமனையை' பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.Prime Minister extends greetings to the people of Gujarat on Gujarat Day
May 01st, 09:14 am
Prime Minister Shri Narendra Modi today extended his warm greetings to the people of Gujarat on the special occasion of Gujarat Day.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
April 26th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.Prime Minister extends Easter Greetings
April 05th, 09:02 am
The Prime Minister, Shri Narendra Modi, has extended greetings on the occasion of Easter.Prime Minister extends greetings on Madhavpur Mela in Porbandar, Gujarat
March 29th, 10:23 am
The Prime Minister, Shri Narendra Modi has extended greetings for the ongoing Madhavpur Mela taking place in Porbandar, Gujarat. Shri Modi remarked that this vibrant celebration highlights our glorious culture and at the same time it reinforces the timeless cultural bond between Gujarat and the Northeast. “This festival brings together perse traditions, reflecting the true spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat.’ I call upon people to visit this Mela!”, Shri Modi stated.Arya Vaidya Sala has played a significant role in preserving, protecting and advancing Ayurveda: PM Modi
January 28th, 02:39 pm
Addressing the centenary celebrations of Arya Vaidya Sala Charitable Hospital in Kerala, PM Modi said the institution has played a key role in preserving, protecting and advancing Ayurveda. Highlighting the growing holistic approach to healthcare, he noted the opening of 12,000 Ayush Wellness Centres. He expressed happiness that Arya Vaidyasala has consistently validated Ayurveda through science and research, and stressed that Ayurveda must increasingly adopt modern technology and AI.கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 28th, 02:25 pm
கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவருடனும் இணைவது தமக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறினார். ஆயுர்வேதத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளில் ஆர்ய வைத்தியசாலை மகத்துவமான பங்களிப்பை செய்ததாக தெரிவித்தார். தமது 125 ஆண்டுகால பயணத்தில் ஆயுர்வேதத்தை சக்திமிக்க சிகிச்சை முறையாக இந்நிறுவனம் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஆர்ய வைத்தியசாலை நிறுவனர் வைத்யரத்னம் பிஎஸ் வாரியரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், ஆயுர்வேதத்தில் அவரது அணுகுமுறை, மக்களின் நலனை அவருடைய அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.உற்சாகம், தேசியப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவிற்குப் பிரதமர் பாராட்டு
January 26th, 04:50 pm
குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் இந்தியா கொண்டாடியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.India’s development journey will continue to receive the blessings of Bhagwan Swaminarayan: PM Modi
January 23rd, 02:12 pm
PM Modi shared his remarks during the Shikshapatri Dwishatabdi Mahotsav, marking 200 years of Bhagwan Swaminarayan’s Shikshapatri. He said that through the Shikshapatri, Bhagwan Swaminarayan provided invaluable guidance for life, and today his followers are running numerous campaigns dedicated to society, the nation and humanity. The PM also urged all enlightened organizations to extend greater cooperation in the Gyan Bharatam Mission.சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 23rd, 02:00 pm
சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நவம்பர் 26 அன்று நடைபெறும் அரசியல் சாசன தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
November 25th, 04:19 pm
அரசியல் சாசன தினக் கொண்டாட்டம் நாடாளுமன்ற மைய மண்பத்தில் நவம்பர் 26 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 76-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்
November 18th, 11:38 am
காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்
September 30th, 09:24 pm
மகா அஷ்டமியின் புனித நாளில் தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
August 07th, 03:31 pm
இந்தியாவின் வளமான நெசவு பாரம்பரியத்தை கொண்டாடும் தினமான இன்று நமது மக்களின் படைப்பாற்றலை கைத்தறி தினம் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் கைத்தறி பன்முகத்தன்மை குறித்தும், வாழ்வாதாரங்கள் மற்றும் வளமையை பெருக்குவதில் அதன் பங்களிப்பு குறித்து பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்
July 26th, 06:47 pm
மாலேவுக்கான தற்போதைய பயணத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' கலந்து கொண்டார். மாலத்தீவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அதிபர் முய்சுவால் கௌரவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவரும் பிரதமர் மோடி ஆவார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.மொரீஷியஸ் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
March 10th, 06:18 pm
எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வதுதேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும்: பிரதமர்
January 25th, 08:45 am
தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.