இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 23rd, 09:24 pm
சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
December 23rd, 09:11 pm
புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.டிசம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
December 22nd, 02:39 pm
டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.