சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும்: பிரதமர்

April 26th, 01:00 pm

இந்திய மக்கள் சார்பாக புனித போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தியதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும் என்று திரு மோடி மேலும் கூறினார்.

புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

April 21st, 02:20 pm

புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். கருணை, பணிவு, ஆன்மீக துணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் அவர் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 23rd, 09:24 pm

சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு

December 23rd, 09:11 pm

புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

July 12th, 09:53 pm

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் பிரதிநிதிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.