Prime Minister meets Prime Minister of Canada on the sidelines of G20 Summit in Johannesburg
November 23rd, 09:41 pm
PM Modi met Canada PM Mark Carney on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg. The two leaders welcomed the adoption of Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership and appreciated the renewed momentum in ties since their June 2025 meeting in Kananaskis. PM Modi extended an invitation to Canada PM to visit India.Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada
November 22nd, 09:21 pm
India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
October 13th, 02:42 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று சந்தித்து பேசினார்.இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்
October 07th, 10:27 am
ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.பீகார் மாநிலம் சிவானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:00 pm
பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, கிரிராஜ் சிங் அவர்களே, லல்லன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம்நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ்பூஷன் சௌத்ரி அவர்களே, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அவர்களே, பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்
June 20th, 12:00 pm
பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் நினைவை பிரதமர் போற்றினார்.ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் சந்திப்பு
June 18th, 05:03 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவுடன் பேச்சு நடத்தினார்.ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 03:17 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை
June 18th, 03:05 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 18th, 03:04 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடல்
June 18th, 03:00 pm
51-வது ஜி7 உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 02:59 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.ஜி7 உச்சிமாநாட்டில் இடையே இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
June 18th, 02:55 pm
கனடாவில் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற 51-வது ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் உரையாடல்
June 18th, 02:51 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.Prime Minister meets the Prime Minister of Australia on the sidelines of G7 summit
June 18th, 02:49 pm
The Prime Minister Shri Narendra Modi met the Prime Minister of Australia, H.E Mr. Anthony Albanese on the sidelines of 51st G7 Summit at Kananaskis, Canada on 17th June 2025.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்
June 18th, 12:32 pm
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.எரிசக்தி பாதுகாப்பு குறித்த ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஜூன் 17, 2025)
June 18th, 11:15 am
ஜி-7 உச்சிமாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்கும், சிறந்த வரவேற்புக்கும் கனடா பிரதமர் கார்னிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-7 கூட்டமைப்பின் 50 ஆண்டு நிறைவையொட்டி, வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை
June 18th, 11:13 am
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்தியா-கனடா இடையே மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்துவதற்காக இருநாட்டு பிரதமர்கள் திரு மோடி, திரு கார்னி சந்திப்பு
June 18th, 08:02 am
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.