First the product, then components and now the semiconductor; this is the definitive next phase of Make in India: PM Modi in Sanand, Gujarat
July 04th, 05:15 pm
PM Modi inaugurated the CG Semi OSAT facility in Sanand, Gujarat and lauded the joint efforts of Indian, Japanese and Thai industry partners. He praised the transition into active commercial production capable of delivering 20 crore units annually, while expressing confidence in the team's ambitious target of reaching 500 crore units. He reiterated that, with a complete commitment to ease of doing business, 140 crore Indians will definitely make the nation developed by 2047.குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
July 04th, 05:00 pm
நாட்டை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவநு அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு சிப் வடிவமைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி ஆகிய பரந்த உத்திகளால் உந்தப்பட்டு, இந்த மூன்றாவது பெரிய ஆலையில் வணிக ரீதியான சிப் பேக்கேஜிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் வடிவமைப்பு, இந்தியாவில் தயாரிப்பு என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாடு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது என அவர் கூறினார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.