Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela

April 26th, 11:23 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.

வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

April 26th, 11:00 am

இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்

இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 24th, 02:00 pm

மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் எனது நண்பர்களே, வணக்கம். இன்றும், அடுத்த இரண்டு நாட்களிலும், பாரதத்தின் வளர்ந்து வரும் துறையான எஃகுத் துறையின் திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட உள்ளோம். இந்தத் துறை, பாரதத்தின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவதுடன், 'வளர்ந்த இந்தியா’ என்பதற்கான வலுவான அடித்தளமாகவும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதும் துறையாகவும் திகழ்கிறது. இந்தியா ஸ்டீல் 2025-க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய தொடக்க தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இது எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.

இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

April 24th, 01:30 pm

மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களில், நாட்டின் முன்னோடித் துறையான எஃகுத் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதையுமா அதனை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். எஃகு உற்பத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது என்றும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஸ்டீல் 2025 கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 08th, 11:50 am

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே; நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினரும், எனது அமைச்சரவை சகாவுமான மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்; மதிப்பிற்குரிய ஊராட்சி உறுப்பினர்கள்; மேடையில் இருக்கும் லட்சாதிபதி சகோதரிகள்; பிற மக்கள் பிரதிநிதிகள்; பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் – உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

March 08th, 11:45 am

குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025)தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் அன்பு, பாசம், ஆசீர்வாதங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மகளிர் தினமான இந்தச் சிறப்பு நாளில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்தது என்றும், இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி-சஃபல் (வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அந்தியோதயா குடும்பங்களுக்கான குஜராத் அரசின் திட்டம்), ஜி-மைத்ரி (கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் திட்டம்) ஆகிய இரண்டு திட்டங்கள் குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.

மார்ச் 1 அன்று "வேளாண்மை மற்றும் கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்

February 28th, 07:32 pm

மார்ச் 1-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் வேளாண்மை மற்றும் கிராமப்புற செழிப்பு என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 24th, 10:35 am

நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை விட்டு புறப்படும் நேரமும் அவர்களின் தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 24th, 10:30 am

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த பதிலுரையின் தமிழாக்கம்

February 06th, 04:21 pm

குடியரசுத் தலைவரின் உரை இந்தியாவின் சாதனைகள், இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது. குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்குவதாகவும் இருந்தது இந்த உரைக்கு குடியரசுத் தலைவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த பதில்

February 06th, 04:00 pm

இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் உரை இந்தியாவின் சாதனைகள், இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார். குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த உரைக்கு குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 22nd, 10:30 am

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் நேர்மறையானதாகவும், ஆக்கப்பூர்வ மானதாகவும், மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதாகவும் இருக்கும் என்று ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்

July 22nd, 10:15 am

அப்போது பேசிய பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த பெருமிதத்திற்குரியது என்றார். எனவே மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை மதிப்பு வாய்ந்ததாக இந்த நாடு பார்க்கிறது. இந்த பட்ஜெட் அமிர்த காலத்திற்கான ஒரு மைல்கல் பட்ஜெட் என்று குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். “இந்த பட்ஜெட், தற்போதைய அரசுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதுடன், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவரின் உரை வரும் ஆண்டுகளில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது: பிரதமர்

January 31st, 05:28 pm

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் இன்றைய உரை 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 31st, 10:45 am

நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்

January 31st, 10:30 am

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம் என்று திரு மோடி கூறினார். ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.