குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.For the benefits of central schemes to reach Bengal, a BJP government is essential: PM Modi in Kolkata
August 22nd, 06:00 pm
PM Modi addressed an overflowing crowd gathered at a public meeting in Kolkata where he declared that Bengal’s rise is essential for India’s rise. He firmly reassured, “The BJP government at the Centre has continuously supported Bengal’s growth. From highways to railways, Bengal has received three times more funds than under UPA. But the biggest challenge is that funds sent from Delhi are looted by the state government and not spent on people’s welfare. Instead, they are siphoned off to TMC cadres,” he said.PM Modi’s Kolkata rally: Call for a Viksit Bangla, real ‘poriborton’ and end of TMC’s misrule!
August 22nd, 05:57 pm
PM Modi addressed an overflowing crowd gathered at a public meeting in Kolkata where he declared that Bengal’s rise is essential for India’s rise. He firmly reassured, “The BJP government at the Centre has continuously supported Bengal’s growth. From highways to railways, Bengal has received three times more funds than under UPA. But the biggest challenge is that funds sent from Delhi are looted by the state government and not spent on people’s welfare. Instead, they are siphoned off to TMC cadres,” he said.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பிரதமர் ஆற்றிய உரை
March 05th, 01:35 pm
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். மக்கள் சக்தி, பொருளாதாரம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்தல்- இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளை வரையறைக்கும் கருப்பொருளாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருப்பதை நீங்கள் காண முடியும். எனவே, இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக உருவெடுத்துள்ளது. மக்கள் சக்தி ,பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறதோ அதே அளவு முன்னுரிமை முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அளித்து வருகிறோம். திறன் மேம்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இந்தப் பிரிவுகளில் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியமாகும். அதே நேரத்தில், இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாகும்.வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் – மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
March 05th, 01:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற இணையவழிக் கருத்தரங்கின் கருப்பொருளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட் இந்தக் கருத்தை அதிக அளவில் பிரதிபலிக்கிறது என்றும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான திட்டமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு மற்றும் திறமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இன்றியமையாதது மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.மார்ச் 5-ம் தேதி வேலைவாய்ப்பு குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்
March 04th, 05:09 pm
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது அரசின் முக்கிய கவனம் செலுத்தும் துறைகளில் ஒன்றாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்பு வழிகளை உருவாக்குவதற்கும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த இணையக் கருத்தரங்கு அரசு, தொழில், கல்வித்துறை மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கும். இது மாற்றத்தக்க பட்ஜெட் அறிவிப்புகளை பயனுள்ள விளைவுகளாக மாற்றும் வகையில் விவாதங்களை ஊக்குவிக்கும். மக்களை மேம்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகளை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தி, விவாதங்கள் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்; 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கை அடைவதை நோக்கி, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தலைமைத்துவம், உழைக்கும் திறமையான, ஆரோக்கியமான பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை
March 04th, 01:00 pm
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த இந்த பட்ஜெட் இணையவழி கருத்தரங்கு ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரியும். இந்த பட்ஜெட் நமது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழு பட்ஜெட் ஆகும். நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பல துறைப்பிரிவுகளில்அரசு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதை நீங்கள் பட்ஜெட்டில் பார்த்திருப்பீர்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பட்ஜெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 04th, 12:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இணைய கருத்தரங்குகள் வளர்ச்சியின் எந்திரங்களாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை எடுத்துக் கொண்டு நடத்தப்படுகின்றன. வளர்ச்சியின் உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி இயக்கங்கள்; ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, ஏற்றுமதி குறித்து நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையகருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். இந்த வரவு செலவுத் திட்டம்(பட்ஜெட் )அரசின் 3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழு வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் விநியோகம் என்றும் இது எதிர்பார்ப்புகளுக்கு மேலானது என்றும் தெரிவித்தார். பல துறைகளில், நிபுணர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரதமர் இன்று (மார்ச் 4) பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழி கருத்தரங்குகளில் பங்கேற்கிறார்
March 03rd, 09:43 pm
பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழிக் கருத்தரங்குகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) நண்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் குறித்து நடைபெறவுள்ளன. உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அணுசக்தி இயக்கங்கள், ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கருத்தரங்கங்களில் விவாதிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 01:00 pm
பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 01st, 12:30 pm
வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 23rd, 06:11 pm
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
February 23rd, 04:25 pm
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.ஈடி நவ் உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 15th, 08:30 pm
கடந்த முறை ஈடி நவ் உச்சிமாநாட்டில் நான் பங்கேற்ற போது, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், எங்களின் மூன்றாவது பதவிக்காலத்தில் புதிய வேகத்துடன் பாரதம் செயலாற்றும் என்று நான் பணிவுடன் குறிப்பிட்டிருந்தேன். அந்த வேகம் தற்போது, நடைமுறையாகியிருப்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். நாடும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய அரசு அமைந்தபின், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களின் வாழ்த்துகளை பிஜேபி- என்டிஏ தொடர்ந்து பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியத்தை ஒடிசா மக்கள் வேகப்படுத்தினர். பின்னர், ஹரியானா மக்கள் தங்களின் ஆதரவை அளித்தனர். தற்போது, தில்லி மக்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டுமக்கள் எவ்வாறு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு இவை அங்கீகாரமாகும்.எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 15th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த எக்னாமிக் டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டின் போது, இந்தியா புதிய வேகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்த வேகம் இப்போது தெளிவாகத் தெரிவது குறித்தும், மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டிற்கு மகத்தான ஆதரவை அளித்த ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, புதுதில்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மக்கள் எவ்வாறு தோளோடு தோள் நின்று செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.PM Modi’s Budget 2025: A Historic Push for Innovation and Research
February 04th, 06:53 pm
Under the visionary leadership of Prime Minister Narendra Modi, India is not only preserving its rich cultural and historical heritage but also making remarkable strides in science, technology, and innovation. In line with this commitment, the government has allocated ₹20,000 crore to encourage private sector-led research, development, and innovation—an unprecedented move.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.The people of Delhi have suffered greatly because of AAP-da: PM Modi during Mera Booth Sabse Mazboot programme
January 22nd, 01:14 pm
Prime Minister Narendra Modi, under the Mera Booth Sabse Mazboot initiative, engaged with BJP karyakartas across Delhi through the NaMo App, energizing them for the upcoming elections. He emphasized the importance of strengthening booth-level organization to ensure BJP’s continued success and urged workers to connect deeply with every voter.