Prime Minister expresses delight over the inauguration of the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ in Leh
May 02nd, 06:59 pm
Prime Minister Shri Narendra Modi today expressed immense delight over the inauguration of the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ in Leh, which took place yesterday on the occasion of Buddha Purnima.Prime Minister extends greetings on Buddha Purnima
May 01st, 09:11 am
Prime Minister Shri Narendra Modi today extended his best wishes to all citizens on the auspicious occasion of Buddha Purnima. Highlighting a strong commitment towards realising the ideals of Lord Buddha, the Prime Minister hoped that his thoughts would deepen the spirit of joy and togetherness in society. He further urged everyone to reiterate the resolve to adopt the life values of Lord Buddha on this sacred occasion that inspires walking on the path of peace, compassion, and goodwill.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
April 26th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.India’s direction and vision for AI are clear, AI is a shared resource for the welfare of humanity: PM Modi
February 19th, 01:00 pm
In his remarks at the Leaders’ Plenary Session during the India AI Impact Summit, PM Modi noted how India has seen technology serve humanity, citing the digital vaccination platform that helped vaccinate millions on time. Highlighting that for India technology is not a medium of power but of service, he underlined that AI too must follow this path to ensure the welfare of humanity. For the ethical use of AI, the PM offered three valuable suggestions.இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
February 19th, 12:39 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் இன்று தெரிவித்த கருத்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்ற பிரதமர், மனிதர்களை மையப்யபடுத்திய கட்டமைப்பு மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
February 05th, 10:45 am
கொழும்பில் உள்ள புனித கங்காராமய புத்த விகாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபர் திரு அனுர குமார திசாநாயக்கவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi
January 03rd, 12:00 pm
PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
January 03rd, 11:30 am
புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் பிப்ரவா நினைவுச்சின்னங்களைக் காண பொது மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
January 02nd, 06:16 pm
ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில் புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரம்மாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 3 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 01st, 05:39 pm
ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார்.பூட்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
November 11th, 06:14 pm
இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருங்கிய உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து வந்த மன்னர்கள் முன்வைத்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.பூட்டான் புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
November 11th, 07:28 am
பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு சிறப்பான வரவேற்பு - பூடான் அரசு தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நன்றி
November 09th, 03:43 pm
இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதைக்காகவும், வரவேற்புக்காகவும் பூடான் அரசு தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த நினைவுச் சின்னங்கள் அமைதி, இரக்கம், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பான காலத்தால் அழியாத செய்தியைக் குறிப்பவை என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். புத்தரின் போதனைகள் இரு நாடுகளின் பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்திற்கு இடையேயான புனிதமான இணைப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்
November 09th, 09:59 am
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பூட்டான் மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார். பூட்டானின் நான்காவது மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70வது பிறந்தநாள் விழாவிலும், உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார்.India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi
September 12th, 04:54 pm
In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 12th, 04:45 pm
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
August 30th, 08:00 am
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.பீகார் மாநிலம் கயாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 12:00 pm
மாண்புமிகு பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களே; பிரபலமான முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம் நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ் பூஷண் சவுத்ரி அவர்களே; துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி அவர்களே மற்றும் விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசின் அமைச்சர்களே; என் சக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா அவர்களே; இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே மற்றும் பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்
August 22nd, 11:20 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷ்ணுபாத் கோவில் அமைந்துள்ள மகத்தான இடமாகவும், ஞானம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான புனிதத் தலமாகவும் திகழும் கயாவிற்கு, வணக்கம் செலுத்துவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆன்மீகம் மற்றும் அமைதிக்கான தலமாக கயா திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனிதமான மண்ணில் புத்தர் ஞானோதயம் பெற்று உன்னத நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார். கயா நகரம் வளமான மற்றும் தொன்மையான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது கயாவை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உணர்வுபூர்வமான வகையில் மரியாதை செலுத்துவதற்காக பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், பீகார் மாநில அரசும், கயாவின் விரைவான வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களை 127 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவந்ததற்கு பிரதமர் வரவேற்பு
July 30th, 02:44 pm
பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இது பெருமை சேர்ப்பதாகவும், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் கூறினார்.