எல்லை பாதுகாப்புப் படை தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 06:18 pm
எல்லை பாதுகாப்புப் படை உருவான தினத்தையொட்டி, அப்படை வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, மிக முக்கிய பணி ஆகியவற்றின் அடையாளமாக எல்லைப் பாதுகாப்புப்படை திகழ்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் அக்டோபர் 30, 31 அன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
October 29th, 10:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் அக்டோபர் 30, 31 அன்று பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் மாலை 5.15 மணியளவில் மின்சார பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மாலை 6.30 மணியளவில் ஏக்தா நகரில் ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant
October 20th, 10:30 am
In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்
October 20th, 10:00 am
ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 31st, 11:00 am
மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
May 31st, 10:27 am
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
May 13th, 03:45 pm
இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.
May 13th, 03:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
December 01st, 08:52 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறி அவர் பாராட்டினார்.பிஎஸ்எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 01st, 10:16 am
எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி நாளில், நமது எல்லைகளின் பாதுகாவலராக முத்திரை பதித்த சிறந்த படையை நாம் பாராட்டுகிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரமும் அசைக்க முடியாத மனப்பான்மையும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இயற்கைப் பேரழிவுகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பங்கையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்குகிறார்
August 27th, 07:08 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 ஆகஸ்ட் 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.எல்லைப் பாதுகாப்புப் படையின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
May 09th, 11:20 pm
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நான்கு கூட்டுப் படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையை பலப்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். ரூ.108.3 கோடி மதிப்பில் இரண்டு குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஒரு உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 09:07 am
எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பாதுகாத்து, நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்யும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சிறந்த சாதனைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.குஜராத் மாநிலம் தியோதர் பனாஸ் பால்பண்ணையில் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
April 19th, 11:02 am
அன்னை அம்பா, அன்னை நரேஷ்வரியை வணங்கி உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். கிராமப்புற பொருளாதாரத்தையும், இந்தியாவின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரமளித்தலையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை, தற்சார்பு இந்தியா இயக்கத்தை கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை ஒருவர் இங்கு நேரடியாகவே உணர முடியும். காசியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் பனாஸ் பால்பண்ணைக்கும், வாரணாசியிலும் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியுள்ள பனாஸ்கந்தா மக்களுக்கும் நன்றி.பனாஸ்கந்தாவில் தியோதரில் உள்ள பனாஸ் பால்வள வளாகத்தில் பலவகையான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
April 19th, 11:01 am
பனாஸ்கந்தா மாவட்டம் தியோதரில் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பால்வள வளாகத்தையும், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய பால்வள வளாகம், ஒரு பசுமைத் திட்டமாகும். இந்த பால்வள வளாகத்தில் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுவதோடு, 80 டன் வெண்ணை, ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்கிரீம், 20 டன் கொழுப்பு நீக்கிய பால் (கோயா), 6 டன் சாக்லேட் உற்பத்தி செய்ய முடியும். உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை, பிரெஞ்ச் ஃபிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு சமோசா, பஜ்ஜி போன்ற பலவகையான உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.குஜராத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 12th, 12:14 pm
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்
March 12th, 12:10 pm
அகமதாபாத்தில் இன்று (12.03.2022) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Parivarvadi groups looted poor's ration, BJP ended their game: PM Modi in Barabanki
February 23rd, 12:44 pm
Prime Minister Narendra Modi addressed massive election rallies in Uttar Pradesh’s Barabanki and Kaushambi. Addressing the public meeting he said, “Development of people of Uttar Pradesh gives speed to development of India. The ability of the people of UP enhances the ability of the people of India. But for several decades in UP, the dynasty-oriented governments did not do justice to the ability of UP.”PM Modi campaigns in Uttar Pradesh’s Barabanki and Kaushambi
February 23rd, 12:40 pm
Prime Minister Narendra Modi addressed massive election rallies in Uttar Pradesh’s Barabanki and Kaushambi. Addressing the public meeting he said, “Development of people of Uttar Pradesh gives speed to development of India. The ability of the people of UP enhances the ability of the people of India. But for several decades in UP, the dynasty-oriented governments did not do justice to the ability of UP.”