Prime Minister shares Sanskrit Subhashitam ahead of BRICS Summit, highlights importance of positive and meaningful dialogue
September 11th, 09:00 am
The Prime Minister, Shri Narendra Modi, said that leaders from across the world will gather for the BRICS Summit in the coming days. He expressed confidence that the Summit will witness positive and meaningful discussions on various issues, guided by the aspiration for the welfare of the world.Meeting of Prime Minister with the President of the Russian Federation
August 31st, 09:49 pm
On the sidelines of the SCO Summit in Bishkek, Kyrgyz Republic, PM Modi met Russian President Vladimir Putin, during which the two leaders reviewed progress in bilateral cooperation across a range of fields. The PM reiterated that dialogue and diplomacy were the way forward in resolving conflicts. The two leaders agreed to remain engaged to further strengthen the Special and Privileged Strategic Partnership between the two countries.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 31st, 03:54 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷெஷ்கியனுடன் இன்று (31.08.2026) இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் அரசு முறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
August 30th, 05:56 pm
உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 07th, 02:51 pm
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
June 23rd, 08:06 pm
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். தற்போதைய உலகளாவிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.Prime Minister holds bilateral talks with the Prime Minister of Ethiopia
December 17th, 12:02 am
During his visit to Ethiopia, PM Modi held discussions with Ethiopian PM Dr. Abiy Ahmed Ali in Addis Ababa. Both leaders reviewed the entire spectrum of the bilateral relationship and agreed to elevate the ties to the level of a Strategic Partnership. PM Modi thanked Ethiopia for its solidarity in the wake of the Pahalgam terror attack. Following the talks, the two leaders witnessed the exchange of MoUs.ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்தார்
November 23rd, 02:18 pm
ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல தென்னாப்பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு
August 31st, 11:00 am
சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
July 09th, 05:55 am
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 11:38 pm
சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
July 07th, 11:13 pm
பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர், உருகுவே அதிபரை சந்தித்தார்.
July 07th, 09:20 pm
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருகுவே குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு யமண்டு ஓர்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பொலிவியா அதிபரை பிரதமர் சந்தித்தார்
July 07th, 09:19 pm
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பொலிவிய அதிபர் மேதகு லூயிஸ் ஆர்ஸ் கேடகோராவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
July 07th, 06:00 am
அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்
July 07th, 05:19 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு
July 07th, 05:13 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.