இந்தியா - பிரேசில் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 12:30 pm
கடந்த ஆண்டு பிரேசிலில் நீங்கள் என்னை எவ்வளவு நட்புறவோடும், விருந்தோம்பலோடும் வரவேற்றீர்களோ, அதே உணர்வுடன் உங்களை இந்தியாவிற்கு நான் மனதார வரவேற்கிறேன். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.பிரேசில் அதிபருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு
January 22nd, 09:43 pm
பிரேசில் அதிபர் மேதகு திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.பிரேசில் அதிபரிடமிருந்து, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு
August 07th, 09:27 pm
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தொலைபேசி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் பேசினார்.இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
July 09th, 06:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
July 09th, 05:55 am
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும்
July 09th, 03:14 am
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 12:58 am
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.பிரதமர் மோடி பிரேசிலின் பிரேசிலியாவுக்கு வருகிறார்
July 08th, 02:55 am
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலியாவுக்கு வந்தார். இந்தியா-பிரேசில் உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனாதிபதி லூலாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் மகிழ்ச்சி
July 06th, 08:28 am
ரியோ டி ஜெனிரோவில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்துடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வரவேற்பிலிருந்து சில காட்சிகளையும் திரு நரேந்திர மோடி தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிற்கு வருகை தருகிறார்
July 06th, 04:47 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலுக்கு வந்தார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பல உலகத் தலைவர்களைச் சந்திப்பார்.கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 02nd, 07:34 am
அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எனது கருத்துப் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கௌரவமிக்கதாக அமையும்.Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia
June 27th, 10:03 pm
PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை
June 18th, 03:05 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
December 12th, 09:50 pm
பிரேசில் அதிபர் திரு லூலா டா சில்வா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை
November 21st, 02:21 am
உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.சிலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:36 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சிலி குடியரசின் அதிபர் திரு. கேப்ரியல் போரிக் ஃபோன்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார். இதுதான் அவர்களின் முதல் சந்திப்பாகும்.