'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.The whole country will take inspiration from you: PM Modi during interaction with Indian Blind Women’s Cricket Team
November 28th, 10:15 am
PM Modi interacted warmly with the Indian Blind Women’s T20 World Cup Champions at his residence in 7, LKM, New Delhi. During the interaction, the PM acknowledged the team’s determination and resilience, appreciated the musical talent of one of the players and also highlighted the significance of 150 years of Vande Mataram. He remarked that their success is an inspiration not only for the differently-abled but for all citizens of India.பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
November 28th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (27.11.2025) புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அன்புடன் அவர்களுடன் உரையாடிய திரு மோடி, அவர்களின் மனஉறுதியை அங்கீகரித்து, தன்னம்பிக்கை மற்றும் ஸ்த்ரத்தன்மையுடன் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் அளித்தார். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள் விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வீராங்கனைகள் தங்களுக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வரவேற்பளித்தார்.
November 27th, 10:03 pm
அண்மையில் பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்பளித்தார். அந்த வீராங்கனைகளுடன் திரு மோடி அன்புடன் உரையாடிய போது போட்டித்தொடர் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
November 24th, 12:23 pm
பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.