பிஸ்வ பந்து சென்னின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
December 26th, 11:46 am
திரிபுரா சட்டப்பேரவைத் தலைவர் பிஸ்வ பந்து சென்னின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரிபுராவின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற சமூகப் பணிகளுக்காகவும் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.