75-வது பிறந்தநாள் எனும் சிறப்புத் தருணத்தை முன்னிட்டு திரு ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 12th, 08:59 am

திரு ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு பல தலைமுறை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகவும், பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பாத்திரங்கள், வகைமைகள் மற்றும் சினிமா பாணிகளைக் கொண்ட அவரது பாராட்டத்தக்க படைப்புகள் இந்திய சினிமாவில் தொடர்ந்து புதிய முத்திரைகள் பதித்து வருவதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

Prime Minister visits Shri LK Advani ji on his birthday

November 08th, 08:23 pm

The Prime Minister, Shri Narendra Modi went to Shri LK Advani Ji's residence and greeted him on the occasion of his birthday, today. Shri Modi stated that Shri LK Advani Ji’s service to our nation is monumental and greatly motivates us all.

இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்

October 21st, 11:23 am

இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கிரீஸ் நாட்டின் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

September 19th, 02:51 pm

ஹெல்லனிக் குடியரசின் (கிரீஸ்) பிரதமர் திரு கிரியகோஸ் மிட்சோடக்கீஸ் இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினார்.

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

September 17th, 08:27 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த அன்பு தமக்கு மேலும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் திரு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 17th, 07:14 pm

பிரதமரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிபரின் வாழ்த்துகளுக்கும், வலிமையான நட்புறவுக்கும் பிரதமர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன், பிரதமர் திரு மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 17th, 07:09 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

பிறந்த தின வாழ்த்து கூறிய திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 17th, 09:28 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய அன்பு தான் நாட்டிற்காக சேவையாற்ற தமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 16th, 11:30 pm

தமது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். “இந்திய-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டுமுயற்சியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உங்களைப் போலவே நானும் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். உக்ரைன் மோதலில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுவதை நோக்கிய உங்களது முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அதிபர் திரு டிரம்ப் பிறந்த தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 16th, 10:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ஜே டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பிரதமர் மோடியின் 75-வது பிறந்த தினத்தையொட்டி அதிபர் திரு டிரம்ப் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

July 06th, 08:12 am

தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அன்பு, இரக்கம், பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளமாக புனித தலாய் லாமா திகழ்வதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதையையும் போற்றுதலையும் தூண்டியுள்ளது என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து

November 08th, 08:50 pm

பிறந்த நாளை முன்னிட்டு திரு. எல்.கே. அத்வானி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இந்தியாவின் மிகவும் போற்றப்படும் ராஜதந்திரிகளில் திரு. எல்.கே.அத்வானி அவர்களும் ஒருவர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி

September 17th, 10:53 pm

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

September 17th, 08:59 pm

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவின் 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 06th, 09:09 pm

தலாய் லாமாவின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் விரைந்து குணமடையவும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து

October 20th, 10:51 pm

கேரள முன்னாள் முதலமைச்சர் திரு. வி.எஸ்.அச்சுதானந்தனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் நன்றி

September 17th, 10:37 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்தும் இன்று குவிந்து வரும் வாழ்த்துகளால் அவர் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 17th, 10:26 pm

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திரு எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு நேரில் வாழ்த்து

November 08th, 02:38 pm

திரு எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.