எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 23rd, 10:10 pm

உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.

புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

August 23rd, 05:43 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

April 03rd, 03:01 pm

எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரி தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்க 'உயிரி ரைடு' என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 18th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (18.09.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development -Bio- RIDE) என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உயிரி தொழில்நுட்பத் புத்தொழில் கண்காட்சி- 2022 இன் துவக்க விழாவில் பிரதமரின் உரை

June 09th, 11:01 am

மத்திய அமைச்சரவை நண்பர்களே, உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட பிரமுகர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்டுள்ள விருந்தினர்களே, வல்லுநர்களே, முதலீட்டாளர்களே, தொழில்துறை நண்பர்களே!

உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்

June 09th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் இன்று உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ தொடங்கிவைத்தார். அவர் உயிரி தொழில்நுட்ப தயாரிப்பு இ-தளத்தையும் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப துறைகளுடன் தொடர்புடையவர்கள், வல்லுனர்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரகதி மைதானத்தில் உயிரி தொழில்நுட்ப புதிய தொழில் கண்காட்சி 2022-ஐ ஜூன் 9 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்

June 07th, 06:44 pm

புதுதில்லி பிரகதி மைதானத்தில் ஜூன் 9 அன்று காலை 10.30 மணிக்கு உயிரி தொழில்நுட்ப புதியதொழில் கண்காட்சி 2022-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.