Our goal must be to make natural farming a fully science-backed movement: PM Modi in Coimbatore, Tamil Nadu

November 19th, 07:01 pm

During the inauguration of the South India Natural Farming Summit 2025 in Coimbatore, Tamil Nadu, PM Modi hailed the city as a power centre of South India’s entrepreneurial strength. He said India is steadily emerging as a global hub for natural farming. Highlighting that farmers have received assistance of over ₹10 lakh crore this year through the Kisan Credit Card (KCC) scheme alone, the PM urged farmers to adopt “one acre, one season” of natural farming.

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்

November 19th, 02:30 pm

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

August 07th, 09:20 am

எனது அமைச்சரவை சகா திரு சிவராஜ் சிங் சௌஹான், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், சுவாமிநாதன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு இருப்பதையும் நான் காண்கிறேன். அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விஞ்ஞானிகள், சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்

August 07th, 09:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

August 06th, 12:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) காலை 9 மணிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

உலக அரங்கில் இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவித்ததற்காக ஜெர்மன் பாடகி காஸ்மேக்கு பிரதமர் பாராட்டு

March 18th, 03:25 pm

இந்தியக் கலாச்சாரத்தை உலக அரங்கில் ஊக்குவிப்பதற்காக ஜெர்மன் பாடகி காஸ்மே பிரதமருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக வன உயிரின தினத்தையொட்டி நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

March 03rd, 08:37 am

உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை

October 25th, 08:28 pm

புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

October 25th, 11:20 am

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 01:50 pm

எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இதற்கு தலை தாழ்ந்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் மக்களின் இந்த அன்பும், பிணைப்பும் எனது மிகப்பெரிய சொத்து. இன்று, அசாம் மக்களுக்காக 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியம் தொடர்பானவை. இந்தத் திட்டங்கள் அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ. 17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

March 09th, 01:14 pm

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

February 29th, 09:35 pm

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறுத்தைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை

September 26th, 04:11 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

India & Greece have a special connection and a relationship spanning centuries: PM Modi

August 25th, 09:30 pm

PM Modi addressed the Indian community at Athens Conservatoire, in Athens. In his address, PM Modi emphasized the unprecedented transformation that India is currently undergoing and the strides being made in various sectors. He lauded the success of the Chandrayaan mission. Prime Minister highlighted the contribution of the Indian community in Greece in advancing the multi-faceted India-Greece relations and urged them to be a part of India’s growth story.

ஏதென்ஸில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

August 25th, 09:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.082023 அன்று ஏதென்ஸில் உள்ள ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.

பருவநிலை நெருக்கடியில் உலகம் சிக்கியுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முன்முயற்சியை நாம் காட்டியுள்ளோம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

August 15th, 05:08 pm

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜி 20 உச்சிமாநாட்டிற்காக ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நாம் முன்வைத்துள்ளோம், அந்த திசையில் செயல்பட்டு வருகிறோம் என்றார். உலகம் காலநிலை நெருக்கடிகளில் சிக்கி திணறி வரும் நிலையில், நாம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை லைப் இயக்கம் மூலம் வழி காட்டியுள்ளோம் என்று அவர் கூறினார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

August 15th, 02:14 pm

எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இப்போது மக்கள் தொகையின் கண்ணோட்டத்தில் கூட நாம் நம்பிக்கையில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பலர் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, 140 கோடி நாட்டு மக்கள், எனது சகோதர சகோதரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்று சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவை நேசிக்கும், இந்தியாவை மதிக்கும், இந்தியாவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் இந்த மாபெரும் சுதந்திரத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

India Celebrates 77th Independence Day

August 15th, 09:46 am

On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 07:00 am

உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.