பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே நேபாள பிரதமரை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்
April 04th, 04:17 pm
பாங்காக்கில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேசத்தின் முதன்மை ஆலோசகரைப் பிரதமர் சந்தித்தார்
April 04th, 03:49 pm
பாங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளின் பட்டியல் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
April 04th, 02:32 pm
ஒவ்வொரு ஆண்டும் பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துதல்.6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 04th, 12:59 pm
இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
April 04th, 12:54 pm
தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் முன்மொழிந்துள்ளார்
April 04th, 12:53 pm
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை ஊக்கப்படுத்துவது பற்றி குறிப்பிட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளமான திறனை பயன்படுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார். அண்மையில் மியான்மரையும், தாய்லாந்தையும் பாதித்த நிலநடுக்க பின்னணியில் இயற்கை சீற்ற மேலாண்மை துறையில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். விண்வெளி உலகத்தில் பணியாற்றுவது குறித்தும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்தும் திரு மோடி எடுத்துரைத்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பை கூட்டாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தலைமை ஏற்பதில் இளைஞர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். கலாச்சார பிணைப்புகள் பிம்ஸ்டெக் நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் சந்திப்பு
April 04th, 09:43 am
பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவரான மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.04.2025) சந்தித்தார்.தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
April 03rd, 08:42 pm
இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். அரசியல் பரிமாற்றங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை, உத்திசார் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அவ்வாறு செய்யும்போது, இணைப்பு, சுகாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம், புதிய தொழில்கள், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல், கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் மோசடிகள் உள்ளிட்ட நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிம்ஸ்டெக், ஆசியான் மற்றும் மேகாங் கங்கா ஒத்துழைப்பு உள்ளிட்ட துணை பிராந்திய, பிராந்திய மற்றும் பலதரப்பு அமைப்புகளில் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு பிரதமர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
April 03rd, 05:43 pm
பாலி மொழியில் திரிபிடகம் பிரதியை வழங்கியதற்காக தாய்லாந்து பிரதமர் திருமதி பாய்டோங்டார்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அழகிய மொழியில் பகவான் புத்தரது போதனைகளின் சாரத்தை இது கொண்டிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
April 03rd, 03:01 pm
எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ராமாக்கியென் எனப்படும் மனங்கவரும் தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்
April 03rd, 01:02 pm
இந்தியா, தாய்லாந்து இடையேயான ஆழ்ந்த கலாச்சார, நாகரீக உறவுகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று ராமாக்கியென் என்ற மனங்கவரும் தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.தாய்லாந்து, பாங்காக் சென்றடைந்தார் பிரதமர் மோடி
April 03rd, 11:01 am
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் பாங்காக்கிற்கு வந்தார். அவர் BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இந்த பயணத்தின் போது பிரதமர் பீடோங்டார்ன் ஷினவத்ராவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
April 03rd, 06:00 am
பிரதமர் திரு பெடோங்டாரன் ஷினவத்ராவின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாகவும், 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும் நான் இன்று தாய்லாந்து புறப்படுகிறேன்.2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்
April 02nd, 02:00 pm
பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).