இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பிரதமர் பயணம்
July 03rd, 08:42 pm
இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகவும், மே 2018-ல் இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகவும் அமையும். இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்வார். ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றுவார். இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான மக்கள் இடையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சிறப்பான பிணைப்புகளைப் போற்றும் வகையில், இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 05:00 pm
பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு செஷல்ஸ் நாட்டில், உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
June 28th, 03:07 pm
செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாநுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான Guardian of the Blue Horizon என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று (28.06.2026) வழங்கி கௌரவித்தார். பிரதமரின் பசுமை செயல்பாடுகள், வளரும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், நீலப் பொருளாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், கடல் வளங்களின் நிலையான மேலாண்மை, சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet
June 28th, 02:02 pm
Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் வாழ்த்து
June 26th, 10:47 pm
கொலம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்
June 18th, 05:04 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.India and Slovakia are moving forward in close coordination on the global stage: PM Modi at the India-Slovakia Joint Press Meet
June 15th, 03:00 pm
At the joint press meet in Bratislava, PM Modi and Slovak Prime Minister Robert Fico announced the elevation of India-Slovakia ties to a Comprehensive Partnership. PM Modi highlighted growing cooperation in trade, technology, defence, space, digital innovation and mobility, saying the upgraded partnership reflects shared priorities, shared trust and a shared vision for the future.சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்
May 22nd, 04:11 pm
சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடுலைஸ் இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இவ்விருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.The friendship between India and Cyprus is both strong and future-oriented: PM Modi at the India-Cyprus Joint Press Meet
May 22nd, 01:00 pm
At the India-Cyprus Joint Press Meet, PM Modi lauded the friendship between India and Cyprus. Highlighting that investment from Cyprus into India has nearly doubled over the last decade, he set a target of doubling it again over the next five years. As India-Cyprus relations have now been elevated to a Strategic Partnership, the PM noted that this would give bilateral ties new ambition and greater momentum.‘No compromise, no double standards on terrorism’: PM Modi at Nordic Summit
May 19th, 04:25 pm
Attending the joint press meet with Nordic leaders, PM Modi highlighted the growing India-Nordic partnership across trade, investment, green technology and innovation. He said both sides decided to shape India-Nordic ties into a Green Technology and Innovation Strategic Partnership and underlined a shared resolve against terrorism, with a clear message of “No compromise. No double standards.பிரதமர், சுவீடன் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்
May 18th, 12:10 am
சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் சுவீடன் பட்டத்து இளவரசி கலந்துகொண்டு 16-வது மன்னர் குஸ்டாஃப் மற்றும் அரசி சில்வியா ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தார். பிரதமர் திரு மோடி மன்னரின் 80-வது பிறந்ததினத்தை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 17th, 11:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் பட்டத்து இளவரசி விக்டோரியா மற்றும் சுவீடன் பிரதமர் திரு.உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோருடன் இணைந்து 2026, மே 17 அன்று சுவீடனின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்
May 17th, 03:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, புகழ்பெற்ற நெதர்லாந்து நீர் மேலாண்மைக் கட்டமைப்பான அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பார்வையிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 17th, 02:35 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள நெதர்லாந்துப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெதர்லாந்து பிரதமர் திரு. ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.நெதர்லாந்து தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
May 16th, 10:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, எரிசக்தி, துறைமுகங்கள், சுகாதாரம், வேளாண் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி டச்சு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த தொழில் துறைத் தலைவர்கள், குறைக்கடத்திகள், தொழில்நுட்பம், புத்தாக்கம்; உள்கட்டமைப்பு, கடல்சார் போக்குவரத்து, எரிசக்தி வேளாண்மை உள்ளிட்டவற்றில், இந்தியாவுக்கான தங்களது உத்திகள் குறித்து எடுத்துரைத்தனர்.ஈராக் பிரதமராகப் பதவியேற்றுள்ள அலி ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
May 16th, 01:35 pm
ஈராக் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈராக்குடனான தனது நீண்டகால நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்றும், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.நெதர்லாந்து இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 16th, 01:30 pm
தி ஹேக் நகரம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நீதிக்கான நகரம் என்று அறியப்பட்டாலும், இன்றைய இங்குள்ள சூழலைப் பார்க்கும்போது, அந்த நகரம் இந்திய நட்புறவின் வாழும் அடையாளமாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது!நெதர்லாந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 16th, 01:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.05.2026) நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் நெதர்லாந்து சென்றடைந்ததும், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினர் பெருந்திரளானோர் அவருக்கு அன்பான, உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.