பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

July 11th, 08:09 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

Third India-Australia Annual Summit Joint Statement

July 09th, 10:58 am

At the invitation of Australian PM Anthony Albanese, PM Modi visited Australia from 8-10 July 2026 for the Third Australia-India Annual Summit in Melbourne. The two leaders reaffirmed their shared commitment to further consolidate and expand the India-Australia Comprehensive Strategic Partnership (CSP) and explore new areas of cooperation for the peace, prosperity and stability of the shared region.

செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 05:00 pm

பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு செஷல்ஸ் நாட்டில், உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

June 28th, 03:07 pm

செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாநுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான Guardian of the Blue Horizon என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று (28.06.2026) வழங்கி கௌரவித்தார். பிரதமரின் பசுமை செயல்பாடுகள், வளரும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், நீலப் பொருளாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், கடல் வளங்களின் நிலையான மேலாண்மை, சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet

June 28th, 02:02 pm

Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.

சீஷெல்ஸ் நாட்டிற்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் (ஜூன் 27-29, 2026)

June 25th, 06:05 pm

இந்தியாவின் 'மகாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2026 ஜூன் 27 முதல் 29 வரை அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின்போது, ​​சீஷெல்ஸின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவர், அதிபர் ஹெர்மினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், சீஷெல்ஸ் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றவுள்ள அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுவார்.

ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்

June 18th, 05:04 am

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.

ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்தித்தார்

June 17th, 12:38 am

பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். இருதலைவர்களுக்கு இடையே 2026-ம் ஆண்டு 3-வது முறையாக நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வலுவான, துடிப்புமிக்க விரிவான உத்திசார் கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.

ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, கனடா பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு

June 16th, 10:36 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் கனடா பிரதமர் திரு மார்க் கார்னியும் 2026 ஜூன் 16 அன்று பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பிரதமருடன் சந்திப்பு

June 15th, 05:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்லோவாக்கியா பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோ இன்று (15.06.2026) வரலாற்று சிறப்புமிக்க பிராட்டிஸ்லாவா கோட்டையில் உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சம்பிரதாய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

India and Slovakia are moving forward in close coordination on the global stage: PM Modi at the India-Slovakia Joint Press Meet

June 15th, 03:00 pm

At the joint press meet in Bratislava, PM Modi and Slovak Prime Minister Robert Fico announced the elevation of India-Slovakia ties to a Comprehensive Partnership. PM Modi highlighted growing cooperation in trade, technology, defence, space, digital innovation and mobility, saying the upgraded partnership reflects shared priorities, shared trust and a shared vision for the future.

Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France

June 14th, 04:36 pm

PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

June 14th, 03:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.

பிரான்ஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி

June 13th, 11:19 pm

பிரான்ஸுக்கான தனது பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்க, அந்நாட்டின் நீஸ் (Nice) நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை வெளிப்படுத்தும் வகையில், அவர் அங்கு வந்திறங்கியபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்குப் பிரதமர் பயணம்

June 09th, 07:20 pm

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, ஜூன் 14 அன்று நைஸ் நகரில் அதிபர் திரு மேக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் அங்கு செல்வார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்திய-பிரான்ஸ் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள். நைஸ் நகரில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் துணிகர மூலதன நிதிகளை ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியையும் இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைப்பார்கள்.

பிரதமர் திரு நரேந்திர மோடி - மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் இடையேயான பேச்சுவார்த்தை

June 01st, 08:09 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங்குடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

May 23rd, 04:20 pm

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மார்கோ ரூபியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்

May 22nd, 04:11 pm

சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடுலைஸ் இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இவ்விருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

The friendship between India and Cyprus is both strong and future-oriented: PM Modi at the India-Cyprus Joint Press Meet

May 22nd, 01:00 pm

At the India-Cyprus Joint Press Meet, PM Modi lauded the friendship between India and Cyprus. Highlighting that investment from Cyprus into India has nearly doubled over the last decade, he set a target of doubling it again over the next five years. As India-Cyprus relations have now been elevated to a Strategic Partnership, the PM noted that this would give bilateral ties new ambition and greater momentum.

இந்தியா - நார்டிக் 3வது உச்சி மாநாட்டின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை

May 19th, 04:25 pm

இன்று இந்தியா-நார்டிக் 3வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக, இந்த உச்சி மாநாட்டை நடத்தியதற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நார்டிக் நாட்டுத் தலைவர்களையும் நான் அன்போடு வரவேற்கிறேன்.