பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
September 24th, 06:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025
May 25th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 22nd, 12:00 pm
ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்
May 22nd, 11:30 am
ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.பிரதமர் மே 22 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார்
May 20th, 01:06 pm
காலை 11:30 மணியளவில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தேஷ்னோக் நிலையத்தையும், பிகானிர்-மும்பை விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
December 16th, 03:19 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.Congress is so confident of its loss, it has entered the bye-bye mode: PM Modi
July 08th, 07:45 pm
Prime Minister Narendra Modi addressed a mega rally in Bikaner, Rajasthan. He began the rally be recalling the famous sweets and namkeen of Bikaner. He acknowledged that for him Bikaner is special as it is also known by the name ‘Choti Kashi’ and like Kashi, Bikaner also has its own history and antiquity.PM Modi addresses a public rally in Rajasthan’s Bikaner
July 08th, 05:52 pm
Prime Minister Narendra Modi addressed a mega rally in Bikaner, Rajasthan. He began the rally be recalling the famous sweets and namkeen of Bikaner. He acknowledged that for him Bikaner is special as it is also known by the name ‘Choti Kashi’ and like Kashi, Bikaner also has its own history and antiquity.ராஜஸ்தானின் பிகானேரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அடிக்கல் நாட்டல்/ திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 08th, 05:00 pm
ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்காரி அவர்களே, திரு அர்ஜுன் மேக்வால் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!ராஜஸ்தானின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 08th, 04:41 pm
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08-07-2023 )அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ. 11,125 கோடி செலவிலான அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவு, சுமார் ரூ.10,950 கோடி மதிப்புள்ள பசுமை எரிசக்தி வழித்தடத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற பாதையின் முதல் கட்டம், சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் உருவாக்கும் பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும். பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை, சுமார் ரூ.450 கோடி செலவில் பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், 43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.