பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 02nd, 01:00 pm
மக்கள் செல்வாக்குள்ள பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி அவர்களே, விஜய் குமார் அவர்களே, இதர விருந்தினர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பீகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மதிப்புமிகு வாழ்த்துகள்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்
September 02nd, 12:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை இன்று காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த முன்முயற்சி, கிராமங்களில் வாழ்வாதார கடன் தொடர்புடைய பெண்கள் எளிதாக நிதி ஆதரவைப் பெற்று தங்களுடைய பணி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜீவிகா வாழ்வாதார கடன் முறை முழுவதுமாக மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி வருகையை தவிர்த்து மொபைல் ஃபோன் வாயிலாக அனைத்தையும் தற்போது மேற்கொள்ள முடியும் என்று தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்காக பீகார் மாநில அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறப்பான முன்முயற்சிக்காக திரு நிதிஷ் குமாருக்கும், பீகார் அரசுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை நாளை (2 செப்டம்பர்) தொடங்கிவைக்கிறார்
September 01st, 03:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை நாளை (2 செப்டம்பர்) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு 105 கோடி ரூபாயை பிரதமர் பரிமாற்றம் செய்கிறார்.