போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 31st, 11:00 am
மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
May 31st, 10:27 am
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.மத்தியப் பிரதேசத்திற்கு நாளை (மே 31 )பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
May 30th, 11:15 am
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழாவையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (மே 31) மத்தியப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். போபாலில் காலை 11.15 மணியளவில் லோகமாதா தேவி அஹில்யா பாய் மகளிர் அதிகாரமளித்தல் மகாசம்மேளனத்தில் அவர் பங்கேற்கிறார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 24th, 10:35 am
நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை விட்டு புறப்படும் நேரமும் அவர்களின் தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 24th, 10:30 am
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.போபாலில் மதிப்புமிகு திரு குஷாபாவ் தாக்கரேக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
February 23rd, 10:07 pm
போபாலில் அமைக்கப்பட்டுள்ள மதிப்புமிகு திரு குஷாபாவ் தாக்கரே உருவச் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்
February 22nd, 02:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். பிற்பகல் 2:15 மணியளவில், அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார். மேலும் பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும் அவர் குவஹாத்திக்குச் சென்று மாலை 6 மணியளவில், ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பிப்ரவரி 25 அன்று, காலை 10:45 மணிக்கு, குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.AAP-da's sinking ship will drown in Yamuna Ji: PM Modi in Kartar Nagar, Delhi
January 29th, 01:16 pm
PM Modi today, addressed a massive crowd in Kartar Nagar, declared that Delhi had rejected excuses, fake promises, and deception. He asserted that the city demanded a double-engine BJP government focused on welfare and development, ensuring housing, modernization, piped water, and an end to the tanker mafia. Confident of victory, he proclaimed, On February 5th, AAP-da Jayegi, BJP Aayegi!”PM Modi’s power-packed rally in Kartar Nagar ignites BJP’s campaign
January 29th, 01:15 pm
PM Modi today, addressed a massive crowd in Kartar Nagar, declared that Delhi had rejected excuses, fake promises, and deception. He asserted that the city demanded a double-engine BJP government focused on welfare and development, ensuring housing, modernization, piped water, and an end to the tanker mafia. Confident of victory, he proclaimed, On February 5th, AAP-da Jayegi, BJP Aayegi!”தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்
October 28th, 12:47 pm
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் ஒன்பதாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று நண்பகல் மதியம் 12:30 மணியளவில், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.Festive mood in Bhopal as PM Modi holds a grand roadshow!
April 24th, 09:50 pm
Prime Minister Narendra Modi held a spectacular roadshow in Bhopal, Madhya Pradesh. Scores of people gathered to greet the PM and cheer for the Bharatiya Janata Party. People enthusiastically chanted 'Modi Modi,' 'Bharat Mata ki Jai' and 'Phir Ek Baar Modi Sarkar.' The atmosphere was electric as supporters showered flower petals, creating a vibrant display of affection and support as the PM's convoy made its way through the city.மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 09:07 pm
நம்மைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டின் விடுதலைக்காகப் போராடும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் பாரதத்தை வளர்ச்சியடையச் செய்து, இந்தியாவை வளமாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் உள்ளது. இன்றும், இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்காக மீண்டும் உங்கள் மத்தியில் குவாலியருக்கு வந்துள்ளேன். தற்போது, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 02nd, 03:53 pm
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் . தில்லி-வதோதரா விரைவுச்சாலை அர்ப்பணிப்பு, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழா, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அர்ப்பணிப்பு, ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.Congress party is being run by Urban Naxals: PM Modi at Karyakarta Mahakumbh in Bhopal
September 25th, 11:33 am
Addressing the large gathering in Madhya Pradesh’s Bhopal, Prime Minister Narendra Modi said, “Madhya Pradesh is an important centre not only of BJP's ideas but also of its vision of development. Therefore, today when the country has set out on a new development journey in the Amrit Kaal, the role of Madhya Pradesh has become even more important. Today investments are coming to India from all over the world and going to different states. This is the time to develop India and Madhya Pradesh.”PM Modi addresses the Karyakarta Mahakumbh in Bhopal
September 25th, 11:32 am
Addressing the large gathering in Madhya Pradesh’s Bhopal, Prime Minister Narendra Modi said, “Madhya Pradesh is an important centre not only of BJP's ideas but also of its vision of development. Therefore, today when the country has set out on a new development journey in the Amrit Kaal, the role of Madhya Pradesh has become even more important. Today investments are coming to India from all over the world and going to different states. This is the time to develop India and Madhya Pradesh.”மத்தியப் பிரதேசத்தின் பினாவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
September 14th, 12:15 pm
மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா ஹர்தீப் சிங் பூரி, மத்தியப் பிரதேசத்தின் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:38 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்; நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 21st, 12:15 pm
இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் மிக முக்கியமான பொறுப்புடன் இன்று நீங்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். இந்த ஆண்டு, நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பு எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறித்து செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து விரிவாக பேசினேன். இந்தியாவின் எதிர்கால சந்ததியை வடிவமைத்து, அவர்களை நவீனமாக வடிவமைத்து, அவர்களுக்கு ஒரு புதிய வழியைக்காட்ட வேண்டியது உங்கள் அனைவரின் கடமையாகும். மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள 5500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசையும் பாராட்டுகிறேன்.மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் உரையாற்றினார்
August 21st, 11:50 am
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று நியமனக் கடிதங்களைப் பெறுபவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளனர் என்று கூறினார். நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பின் முக்கியப் பங்கை விவரிக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், இன்று வேலை பெறுபவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து, அவர்களை நவீனமயமாக்கி, அவர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கும் பொறுப்பை வகிப்பார்கள் என்று சுட்டிக் காட்டினார். இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் இன்று மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதமர், இந்த சாதனைக்காக மாநில அரசைப் பாராட்டினார்.ஐந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
June 27th, 10:17 pm
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்கள், போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்.