பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை: சீர்திருத்தம், தற்சார்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை
August 15th, 10:23 am
நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவின் தன்னம்பிக்கை, மாற்றத்திற்கான பயணம் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியா சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றால் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது இன்னும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார். சட்டங்கள், ஒழுங்குமுறைகள், செயல்முறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டு, தொழில்முனைவு ஊக்குவிக்கப்பட்டு் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.