பாரத் டெக்ஸ் 2025 வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 16th, 04:15 pm

எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 16th, 04:00 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது எனவும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் கூறினார். பாரத் டெக்ஸ் தற்போது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வாக மாறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பன்னிரண்டு பிரிவுகளும் இந்த முறை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளன என்று அவர் கூறினார். உதிரிப்பாகங்கள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், சாயங்களின் கண்காட்சிகளும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

பிப்ரவரி 16 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்

February 15th, 01:56 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சுமார் 4 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுகிறார்.